வெள்ளி, மார்ச் 28, 2014

டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் தாய்மொழி எது?

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
மறைந்த சிம்மக் குரலோன் டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் தாய்மொழி எது? என்று கேட்டால் நம்மில் பலரும் கண்ணை மூடிக்கொண்டு 'தமிழ்' என்று கூறி விடுவர். ஆனால் உண்மையில் அவரது தாய்மொழி தற்போது அழிந்து போகும் நிலையில் உள்ள 'சௌராஷ்டிரா' மொழி ஆகும். இந்த மொழியைப் பேசுவோர் குஜராத் மாநிலத்திலிருந்து வியாபார நிமித்தமாகவும், படை எடுப்புகளின்போதும் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா முழுவதும் பரவியபோது தமிழ் நாட்டிற்கும் வந்து சேர்ந்தனர். தற்போது இவர்கள் தமிழ் நாட்டில் 'சிறு பான்மையினர்' ஆவர். இவர்கள் தங்கள் வீடுகளில் 'சௌராஷ்டிர' மொழியையும், வீட்டிற்கு வெளியே 'தமிழ்' மொழியையும் அழகாகப் பேசுகின்றனர். இந்தியா முழுவதும் இம்மொழியைப் பேசுவோர் சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் இந்தச் சமூகத்தவர் விரும்பிப் பார்ப்பது 'தமிழ்த் திரைப்படங்களே' ஆகும். இவர்கள் தமது மொழியில் விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களையும் தயாரித்துள்ளனர். இவர்கள் தயாரித்த 'ஈகொஸ் எனோ'(Egos Eno) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. "இசைக்கு மொழியில்லை" என்பது உண்மையானால் 'கிண்டல்' செய்யாமல் பார்வையிடவும். அதுதான் அவர்களது மொழிக்கும், அமரர்.டி.எம்.எஸ் அவர்களுக்கும் நாம் செய்யும் மரியாதை.

காணொளி உதவிக்கு நன்றி: Chitrakala Suraj

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

சௌந்தர்யமான தமிழ் உச்சரிப்புக்கு சொந்தக்காரர் TM சௌந்தர் ராஜன் என்றால் ஒப்புக்கொள்ளாதவர்கள் யாரிருக்க முடியும் ?
அவரும் தாய் மொழியில் பலபக்தி பாடல்கள் பாடியுள்ளார் !
இப்போது முன்னேறிவரும் சௌராஷ்டிர மொழிப் பாடலை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி !

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// தற்போது அழிந்து போகும் நிலையில் உள்ள //

கண்டிப்பாக அழியாது... 120 வருட பிரச்னையை முடித்து 08.08.2008 அன்று சௌராஷ்டிரா மொழியும் உருவாகி விட்டது...

பெயரில்லா சொன்னது…

super song thank you, surendra. guntur

SAHAPAYANI சொன்னது…

AVRAE SOURASHTRA BASHO KOBBHIMU RHAI. THEELAE KOBBIM NINAATHA JHANNA. ELLAY THUMI KALALLIKIN LIKHUVO. JUKHU VISHWAS.- SARAVANO.

கருத்துரையிடுக