வியாழன், மார்ச் 20, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 104 உழவு

ஏரினும் நன்றால் எருஇடுதல், கட்டபின் 
நீரினும் நன்றுஅதன் காப்பு. (1038)
 
பொருள்: ஏரினால் நிலத்தை உழுவதைக் காட்டிலும் எருவிடுதல் நல்லது. களை எடுத்த பிறகு நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் பயிரை வேலி முதலியன அமைத்துக் கேடு நேராமல் காப்பது நல்லதாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக