சனி, டிசம்பர் 14, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து

அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. (943)
 
பொருள்: ஒருவன் முன்பு உண்ட உணவு செரித்த பின்பு உண்ணுதல் வேண்டும். அவ்வாறு உண்பது பெறுவதற்கு அரிய மனித உடலைப் பெற்ற இந்தப் பிறவியில் அதனை நீண்ட காலம் வாழ வைக்கும் வழியாகும்.

1 கருத்து:

Iniya சொன்னது…

உண்மையே நன்றி குறளுக்கும், கருத்துக்கும், உங்களுக்கும்.
தொடர வாழ்த்துக்கள்...!

கருத்துரையிடுக