வியாழன், மார்ச் 07, 2013

சாப்பாட்டில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள்:

1. 
தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது. இதனால், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

2. 
உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.

3.  
வெண்ணெய்யை விட உருக்கப்பட்ட சுத்தமான நெய்யில் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிக்கும்.

4. 
நெய்யை பிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை. அதை கைபடாமல் வெளியில் வைத்திருந்தாலே நீண்ட காலத்துக்கு கெடாது. அதனால், நெய்யில்மாற்றம் ஏற்படாது.

5. 
நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும்.

6. 
விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்.

7. 
 உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை. அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம்.
நன்றி: ஜக்சொன் ராஜ் 
mylifegift.blogspot.com

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிக்க நன்றி... (நல்லதொரு தள அறிமுகத்திற்கும்)

கருத்துரையிடுக