செவ்வாய், மார்ச் 05, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 66  வினைத் தூய்மை
 
 
எற்றுஎன்று இரங்குவ செய்யற்க; செய்வானேல் 
மற்றுஅன்ன செய்யாமை நன்று. (655)

பொருள்: தான் செய்தது இழிவானது என்று பின் தானே நினைத்து வருந்தும் செயல்களை ஒருவன் செய்யக்கூடாது. ஒருவேளை தவறிச் செய்ய நேரிடுமாயின் பின்னர் அத்தவறை மீண்டும் செய்யாமல் இருத்தல் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக