நாட்டின் பெயர்:
பெர்முடா(Bermuda)
வேறு பெயர்கள்:
பெர்முடாஸ்/சொமேர்ஸ் தீவுகள்(Bermudas/Somers Islands)
அமைவிடம்:
வட அத்திலாந்திக் சமுத்திரம்
எல்லைகள்:
தலைநகரம்:
சென்.ஜோர்ஜஸ் (St.Georg's)
அலுவலக மொழி:
ஆங்கிலம்
ஏனைய மொழிகள்:
போர்த்துக்கேய மொழி
கல்வியறிவு:
98 %
இனங்கள்:
ஆபிரிக்கக் கரீபியர்கள்:54,8 %
ஐரோப்பியர்கள்:34.1 %
கலப்பு இனங்கள்:6,4 %
ஏனையோர்:0,4 %
சமயங்கள்:
அங்கிலிக்கன் கிறீஸ்தவம்,ரோமன் கத்தோலிக்கம்,ஆபிரிக்க மெதடிஸ்ட்,புரட்டஸ்தாந்துகள்,நாத்தீகர்.
ஆட்சிமுறை:
பிரித்தானியாவின் கடல் கடந்த பிரதேசம்.
முடிக்குரிய அரசி:
மாட்சிமை தங்கிய இரண்டாவது எலிசபெத்(இங்கிலாந்து இராணி)
ஆளுநர்:
சர்.ரிச்சர்ட் கோஸ்னி(Sir.Richard Gozney)
தலைமை அமைச்சர்:
பவுலா கோக்ஸ்(Paula Cox)
பரப்பளவு:
53,2 சதுர கிலோமீட்டர்கள்
சனத்தொகை:
67,837(2009 மதிப்பீடு)
ஆயுட்காலம்:
ஆண்கள்:77.4 வருடங்கள்
பெண்கள்:83.9 வருடங்கள்
நாணயம்:
பெர்முடியன் டாலர்(BMD)
இணையத்தளக் குறியீடு:
.bm
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
001-441
கனிய வளங்கள்:
குறிப்பிடும் படியாக ஏதுமில்லை.
விவசாய உற்பத்திகள்:
வாழைப்பழம், தோடம்பழம்(ஆரஞ்சு), காய்கறிகள், பால், தேன்.
தொழிற் துறைகள்:
சர்வதேச வர்த்தகம், சுற்றுலாத்துறை, சிறு தொழிற்சாலை உற்பத்திகள், மருத்துவப் பொருட்கள் உற்பத்தி.
நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
- உலகில் தனிநபர் வருமானம் அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.இருப்பினும் இந்நாட்டில் 19 %மான மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
- உலகில் வங்கித் துறையினால் அதிக வருமானத்தைச் சம்பாதிக்கும் நாடு.
- ஒரு நாட்டிற்குரிய சகல அம்சங்களும்(அமைச்சரவை உட்பட) இருப்பினும் பிரித்தானியாவின் கடல்கடந்த பிரதேசம் என்பதால் இந்நாட்டிற்கு ஐ.நாவில் அங்கத்துவமோ, ஆசனமோ கிடையாது.
- ஒரு சுதந்திர நாடாக செயற்படுவதற்கு அனுமதி உள்ளபோதும், "அமெரிக்கா போன்ற வல்லரசுகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைகள் நடத்தக் கூடாது" என்ற 'கட்டுப்பாடு' பிரித்தானியாவினால் விதிக்கப் பட்டுள்ளது.
- இந்நாடு தனது 'கடல் கடந்த பிரதேசம்' என்ற விடயத்தை பிரித்தானியா பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ளது.
1 கருத்து:
Good
கருத்துரையிடுக