ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்
புளி மாமரத்தின் ஒரு கிளையையும், இனிப்பு மாமரத்தின் ஒரு கிளையையும் ஒட்டி ஒரு புதிய மாங்கன்று அல்லது மாமர இனம் உருவாக்கப் படுகிறதல்லவா? இதுவும் மரபணுக்களை மாற்றும் ஒரு திட்டம்தானே? இவ்வாறு இயற்கைக்கே சவால் விடுமளவிற்கு பல அரிய உண்மைகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தாவரங்களுக்கு உணர்வு இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு பதிலே கூறவில்லையே அது ஏன்? எவராவது ஒரு விஞ்ஞானி தாவரங்களுக்கு உணர்வு இருக்கிறதா என்று கண்டுபிடித்தாரா? ஆம் ஒரு விஞ்ஞானி கடந்த நூற்றாண்டில் எம் மத்தியில் வாழ்ந்தார், அவர் இக்கேள்விகளுக்கு விடை கண்டு பிடித்தார்.சேர்.ஜகதீஷ் சந்திர போஸ் (1858-1937)
மகாத்மா காந்தி தொடக்கம், பல இந்தியத் தலைவர்களும் இங்கிலாந்துக்குச் சென்று கல்விகற்றுப் பட்டம் பெற்றதுபோல் போஸ் அவர்களும் இங்கிலாந்தில் உள்ள 'கேம்பிரிட்ஜ்' போன்ற பிரபலமான பல்கலைக் கழகங்களில் கல்வி கற்றார். சாதாரணமாக ஒரு விஞ்ஞானி ஒரு துறையில் மட்டும் பட்டம் பெறுவது வழக்கம். ஆனால் திரு.போஸ் அவர்கள் உயிரியல், தாவரவியல், இயற்பியல்(பௌதீகவியல்) வரலாற்றியல் போன்ற பல துறைகளிலும் பட்டம் பெற்றிருந்தார். சாதாரண ஒரு இந்தியக் குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதனால் அக்காலத்திலிருந்த சூழ் நிலையில் ஒரு பட்டப் படிப்பையே இங்கிலாந்தில் படித்து முடிப்பதற்குப் பல போராட்டங்களை வாழ்வில் சந்திக்க வேண்டியிருந்த நிலையில், போஸ் அவர்களால் பல பட்டப் படிப்புகளை இங்கிலாந்தின் பிரபலமான பல்கலைக் கழகங்களில் படித்து முடித்தல் எவ்வாறு சாத்தியமானது? "அறிவிற்கு இவ்வுலகம் அடிமையானது", "இவ்வுலகை அறிவுதான் ஆளுகிறது" ("knowledge is wealth", "Knowledge is power") எனும் ஆங்கிலப் பழமொழிகள் இங்குதான் நினைவு கூரப் படுகிறது.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக