சனி, மார்ச் 05, 2011

ஞாபக நதிக்கரையில்...,

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!

உங்கள் அந்திமாலையில் இந்த வாரம் முதல், வாசகர்களால் ஊர்களில், கிராமங்களில், நகரங்களில் எடுக்கப்பட்ட தரமான புகைப்படங்களுக்கும் வாய்ப்பளிப்பதென முடிவு செய்துள்ளோம்.

இப்பகுதிக்கு நீங்களும் உங்கள் புகைப்படக் கருவியின் மூலம் எடுத்த கண்ணையும், கருத்தையும் கவரக் கூடிய புகைப்படங்களை அனுப்பி வைக்கலாம். உங்கள் திறமையால் உருவான புகைப்படங்களை அந்திமாலையில் பிரசுரிக்க ஆவல் உள்ள வாசகர்கள் உங்கள் புகைப்படங்களை அவற்றை எடுத்தவரின் பெயர், எடுக்கப்பட்ட இடம்(கிராமம், நகரம், நாடு) எடுக்கப்பட்ட நேரம்(காலை,மாலை, திகதி), அப்புகைப்படம் சொல்லும் சேதி என்ன? போன்ற விபரங்களுடன் anthimaalai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் மின்னஞ்சல் எமக்குக் கிடைக்கப்பெற்ற வரிசைக் கிரமத்தின் படி உங்கள் புகைப்படங்கள் பிரசுரிக்கப் படும்.

ஆசிரியபீடம் 
அந்திமாலை  

இன்றைய புகைப்படம்: வயலும் வயல்சார்ந்த இடமும்.
3 ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டி, யாழ் மாவட்டம், இலங்கை. 

புகைப்படம்: புகைப்படப் பிரிவு, அந்திமாலை - 30.01.2011 மாலை 


1 கருத்து:

Sakthy, Denmark சொன்னது…

It's a very good start. Hope to see many pictures from villages in India & Sri Lanka.

கருத்துரையிடுக