வெள்ளி, மார்ச் 18, 2011

தாரமும் குருவும் - பகுதி 1.1

இ.சொ.லிங்கதாசன் 
பகுதி 1.1 (ஆரம்பம்)
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
 "தாரமும் குருவும் தலைவிதிப் படியே" என்ற பழமொழியை ஒரு இருபது வருடங்களுக்கு முன்பாக கேள்விப் பட்டேன். அப்போதெல்லாம் எனக்கு இப்பழமொழியின்மீது துளியளவும் உடன்பாடு கிடையாது.ஆனால் சில ஆண்டுகளாக எமது முன்னோர்களின் பழமொழிகள் சமுதாய வாழ்வில் உணர்த்தும் உண்மைகளைக் கண்கூடாகக் கண்டபின்னர், மேற்கூறிய பழமொழியும் ஓர் போற்றத்தக்க 'உண்மை' எனக் கண்டறிந்தேன். 
சரி இத்தொடரின் மூலம் வாசகர்களாகிய உங்களிடம் அடியேன் பகிர்ந்து கொள்ள விரும்புவது என்ன? பதில் மிகவும் 'எளிமையானது' "எனது பாடசாலை நாட்களையும், நான் சந்தித்த ஆசிரியர்களையும், அவர்தம் போற்றத்தக்க, வெறுக்கத்தக்க இயல்புகளையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்" உங்கள் சிந்தனைக்கு இத்தொடர் ஏதாவதொரு வகையில் 'பங்களிப்புச் செய்தால்' மகிழ்வேன்.
(தொடரும்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக