முழுப் பெயர்:
பூட்டான் இராச்சியம்
தலைநகரம்:
திம்பு (Thimphu)
அமைவிடம்:
தெற்கு ஆசியா
எல்லைகள்:
தெற்கு,மேற்கு,கிழக்கு:இந்தியா
வடக்கு:சீனா
எல்லையிலுள்ள இந்திய மாநிலங்கள்:
தெற்கு - மேற்கு வங்காளம்
அலுவலக மொழி:
ஷோங்கா (Dzongkha)
ஏனைய மொழிகள்:
ஆங்கிலம்
சமயங்கள்:
புத்த சமயம்:76 %(வஜ்ராயன பௌத்தம்)
இந்து சமயம்: 23 %
ஏனையோர்: 1 %
59.5 %
ஆயுட்காலம்:
ஆண்கள்: 61 வருடங்கள்
பெண்கள்: 64.5 வருடங்கள்
அரசாங்க முறை:
மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி.
மன்னர்:
ஜிக்மே கேசார் நம்யேல் வாங்சுக் (Jigme Khesar Namgyel Wangchuk)
பிரதமர்:
ஜிக்மே Y.தீன்லே (Jigme Y.Thinley)
மன்னரின் பதவி சம்பிரதாயபூர்வமாக்கப் பட்ட/அதிகாரம் குறைக்கப் பட்ட ஆண்டு:
2007
சனத்தொகை:
691,141 (2009 மதிப்பீடு)
பரப்பளவு:
38,816 சதுர கிலோ மீட்டர்கள்
நாணயம்:
ங்குல்ரம்(Ngultrum)
இந்திய ரூபாயும் உபயோகிக்க முடியும்.
இணையத் தளக் குறியீடு:
.bt
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-975
விவசாயம், சுற்றுலாத்துறை.
கனிய வளங்கள்:
மரம்,இயற்கை மின்சாரம், ஜிப்சம்,கல்சியம் கார்பனேட்.
ஏற்றுமதிப் பொருட்கள்:
அரிசி,கோதுமை, சோளம், பார்லி, கிழங்கு வகை, மிளகாய், பால் உணவுகள், தோடம்பழம்(ஆரஞ்சு), எலுமிச்சை, அப்பிள் பழம்(ஆப்பிள்)
தொழிற்சாலை உற்பத்திகள்:
சீமெந்து, மரங்கள், பழங்கள் பதனிடல், மதுபானம் தயாரிப்பு.
- Business Week என்ற சஞ்சிகை உலகளாவிய ரீதியில் நடத்திய ஆய்வில் ஆசியாவிலேயே மிகவும் மகிழ்ச்சியான மக்கள் வாழுகின்ற(கிடைப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்கின்ற / இருப்பதைக் கொண்டு சிறப்போடு/மன நிறைவோடு வாழ்கின்ற) நாடாகவும், உலகில் மகிழ்ச்சியான மக்கள் வாழ்கின்ற நாடுகளின் வரிசையில் எட்டாவது இடத்திலும் பூட்டான் மக்கள் உள்ளனர்.(டென்மார்க் மக்கள் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது)
- இலங்கை அரசுக்கும் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இடையில் 1985 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகள் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு வெளியே நடைபெற வேண்டும் என இரு தரப்பினரும் விரும்பியதால் அப் பேச்சுவார்த்தைகள் பூட்டானின் தலைநகர் 'திம்புவில்' நடைபெற்றன. இதனாலேயே இப்பேச்சுவார்த்தைகள் 'பூட்டான் பேச்சுவார்த்தை' என்றோ அல்லது 'திம்புப் பேச்சுவார்த்தை' என்றோ அழைக்கப் படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக