சேர்.ஜகதீஷ் சந்திர போஸ் (1858-1937)
சாதாரண ஒரு இந்தியக் குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதனால் அக்காலத்திலிருந்த சூழ் நிலையில் ஒரு பட்டப் படிப்பையே இங்கிலாந்தில் படித்து முடிப்பதற்குப் பல போராட்டங்களை வாழ்வில் சந்திக்க வேண்டியிருந்த நிலையில், போஸ் அவர்களால் பல பட்டப் படிப்புகளை இங்கிலாந்தின் பிரபலமான பல்கலைக் கழகங்களில் படித்து முடித்தல் எவ்வாறு சாத்தியமானது? "அறிவிற்கு இவ்வுலகம் அடிமையானது", "இவ்வுலகை அறிவுதான் ஆளுகிறது" ("knowledge is wealth", "Knowledge is power") எனும் ஆங்கிலப் பழமொழிகள் இங்குதான் நினைவு கூரப் படுகிறது.
ஆம் நான் மேலே குறிப்பிட்டபடி ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தில் பிறந்த 'போஸ்' அவர்கள் இங்கிலாந்தில் பல பட்டப் படிப்புகளைப் படித்து முடிப்பதற்கு எங்கிருந்து 'பணம்' கிடைத்தது? அக்காலத்தில் ஒரு மனிதன் கல்வியைச் சுலபமாகக் கற்று முடிப்பதற்கு உதவுகின்ற எந்தவகையான 'வாய்ப்புகளும்' காணப்படவில்லை.பள்ளிகளோ, கல்லூரிகளோ,பல்கலைக் கழகங்களோ இலவசக் கல்வியை வழங்குவதில்லை. சமூக நல உதவித் திட்டங்களும் 'பிரித்தானிய ஆட்சிக் காலத்தில்'கிடையாது, 'புலமைப் பரிசில்'(Scholarship)திட்டம் என்றால் என்னவென்றே தெரியாத காலம் அது. இவ்வாறிருக்கையில் திரு.போஸ் அவர்கள் நான்கு வெவ்வேறு துறைகளில் படித்து, அதுவும் இங்கிலாந்துப் பல்கலைக் கழங்களில் படித்து பட்டம் பெறுவதற்கு எவ்வாறு உதவி கிடைத்தது?
இங்குதான் 'அறிவின் முன்னால்' ஆட்சியதிகாரம் கூட தலை வணங்குவதைக் காண முடிகிறது.இவரது அறிவாற்றலைக் கேள்வியுற்ற அக்காலத்து 'பிரித்தானிய ஆட்சியாளர்கள்' போஸ் அவர்களின் கல்விக்கு தேவையான உதவிகளைத் தாமாகவே முன்வந்து வழங்கினர். இவர் கல்விகற்ற புனித சவேரியார் கல்லூரியின் அதிபர்கள்,ஆசிரியர்கள் அனைவருமே ஆங்கிலேயர்களாகவும், ஆங்கிலேயப் பாதிரியார்களாகவும் இருந்தனர். இவர்கள் திரு.போஸ் அவர்களிடம் உலகெங்கிலும் காண முடியாத ஒரு 'ஒப்பற்ற அறிவாற்றல்' காணப் படுவதைக் கண்டு கொண்டனர். இவர் மேற் கல்வியைக் கற்றால் அது பாரத நாட்டிற்கு மட்டுமன்றி பிரித்தானியாவிற்கும், ஏன் முழு உலகிற்குமே மதிப்பிடமுடியாத அரிய செல்வமாக மாறும் என உறுதிபட நம்பினர். இதனாலேயே 'திரு.போஸ்.அவர்களின் கல்விக்கு பேராதரவு நல்கி, அளப்பரிய உதவிகளும் புரிந்தனர்.
விஞ்ஞானி திரு.போஸ் அவர்களின் கண்டுபிடிப்புகள்
சாதாரணமாக எமது வீடுகளில் ஒலிக்கும் 'அழைப்பு மணி'கூட(Calling bell) யாரால் கண்டு பிடிக்கப் பட்டது? என்று வரலாற்றின் பக்கங்களில் தேடினால் 'ஜோசப் ஹென்றி' என்ற பெயரே நமக்கு விடையாகக் கிடைக்கும் அவர்தான் இதைக் கண்டு பிடித்தார் என்பது உண்மையே, ஆனால் மிகவும் கடினமான செயற்பாடுகளின் மூலம் இயக்கக் கூடிய அந்தத் தொழில் நுட்பத்தை இலகுபடுத்திய/நவீனப் படுத்திய பெருமை திரு.போஸ் அவர்களையே சாரும்.
தனது கண்டுபிடிப்புகள் எதற்குமே காப்புரிமை வாங்காமலே இருந்துவிட்டார்.இத்தகைய ஒரு விஞ்ஞானியை இக்காலத்தில் இம்மண்ணில் காண முடியுமா? இத்தகைய ஒரு மனிதன் இக்காலத்தில் நம் மத்தியில் வாழ்ந்தால் "பொழைக்கத் தெரியாத புள்ள" எனப் பெயர் வாங்கியிருப்பார் அல்லவா? சரி இவர் மட்டும்தான் தனது கண்டுபிடிப்புகளுக்கு 'காப்புரிமை' வாங்காது விட்ட விஞ்ஞானியா? என வரலாற்றின் பக்கங்களில் தேடிப் பார்த்தபோது, இன்னும் இரண்டு விஞ்ஞானிகளின் பெயர்களை மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் காண முடிந்தது.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக