செவ்வாய், ஏப்ரல் 01, 2014

இணுவையூர் மயூரனுக்கு நன்றிகள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQZqoky8KSvlAxLQvbVQHcsAxzfLWJnmkv2T69zphVbXW-0KGgqT1475Zc0ossHJUfPAjv1dxYHsIlkWVYPUg2PCEjlLZMQKnpPs0aITQmaA-ouVtNIL-X6qt_3qW1D0PD2vljBtQT3KI/s200/nanri.jpgகடந்த 30.03.2014 அன்று உங்கள் அந்திமாலையில் வெளியாகிய எனது ஆய்வுக் கட்டுரையாகிய "நேர மாற்றம் ஏன், எதற்கு? என்ற கட்டுரையை சுவிட்சர்லாந்தில் வாழும் அன்புத் தம்பி 'இணுவையூர் மயூரன்'(inuvaijurmayuran.blogspot.com ) அவர்கள் 'யாழ் இணையத்தில்' (www.yarl.com) 'கருத்துக்களம்' பகுதியில் இணைத்திருந்தார். அதனை அவ் இணையத்தில் மட்டும் 366 வாசகர்கள் பார்வையிட்டிருந்தனர். ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பை உருவாக்குவற்கும், வெளியிடுவதற்கும், விளம்பரப் படுத்துவதற்கும் நேரப் பற்றாக்குறையால் அவதியுறும் இந்தப் புலம்பெயர் மண்ணில் இன்னொரு படைப்பாளியின் ஆக்கம் பலரையும் சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் செயற்பட்ட அன்புத் தம்பி 'இணுவையூர் மயூரனுக்கு' என் உளமார்ந்த நன்றிகள். மேற்படி எனது ஆக்கத்திற்கு 'யாழ்' இணையத்தில் கருத்துரைத்த, மற்றும் பாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள்.

"ஒன்றுபட்டு உயர்வோம்"
மிக்க அன்புடன் 
இ.சொ.லிங்கதாசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக