சனி, ஏப்ரல் 12, 2014

ஆண்மை பெருக ஐந்து ரூபாய் போதும்!

கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு முன்னால் பிரபல கடல் யாத்திரிகரான 'மார்க்கோபோலோ', தன்னுடன் பயணித்த சக யாத்ரிகர்களிடம் ஒரு வகை காய், பழம், இலை போன்றவைகளைக்காட்டி ‘உங்களில் யாருக்காவது வயிற்று உபாதைகள் இருந்தால் அதை போக்கவும், பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருப்பவர்களுக்கு வயிற்று தொந்தரவுகள் வராமல் இருக்கவும், இவைகளை சாப்பிடுங்கள்’ என்று கூறினார்.

அவர் காட்டியது பப்பாளிக் காய், பப்பாளிப்  பழம், பப்பாளி இலை இவைகளைத்தான். அதிக செலவு இல்லாமல், குறிப்பிடத்தக்க கவனிப்பும் இல்லாமல், எளிதாக வளர்ந்து- முழு பலன்தரும் பப்பாளியை டெங்கு காய்ச்சலுக்கான மருந்தாக, மருத்துவ உலகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பப்பாளியில் அரிதான பல்வேறு சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

இன்று பெரும்பாலான மனிதர்கள் ஜீரணக்கோளாறால் சிரமப்படுகிறார்கள். அதனால் காலப்போக்கில் அவர்கள் பல்வேறு நோய்களின் தொந்தரவிற்கும் உள்ளாகிறார்கள். ஜீரணத்தை சரிசெய்யும் அபூர்வ சக்தி பப்பாளியில் இருக்கிறது. இந்த பழத்தில் கைமோபேப்பைன், பேப்பைன் ஆகிய இருவித என்சைம்கள் இருக்கின்றன.

இவை ஜீரணத்திற்கு வெகுவாக துணைபுரிகிறது. வைட்டமின், புரோட்டீன், சர்க்கரை, கால்சியம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், சிங்க், பாஸ்பரஸ், பிட்டாகரோட்டின் போன்றவைகள் எல்லாம் பப்பாளி பழத்தில் அடங்கியிருக்கின்றன.

பப்பாளி பிஞ்சு காயில் இருந்து எடுக்கப்படும் வெள்ளை நிற பால், தொழில் துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இறைச்சியை மென்மையாக்குவதற்கும், சுயிங்கம் தயார் செய்வதற்கும் பப்பாளி பால் பயன்படுகிறது. ஹைப்பர் அசிடிட்டி, பெப்டிக் அல்சர் போன்ற நோய்களுக்கு பப்பாளி சாறு மருந்தாக அமைகிறது.

வீடுகளில் இறைச்சியை வேகவைக்கும் போது அதில் பப்பாளி துண்டுகளை வெட்டிப்போடுவார்கள். இது இறைச்சி நன்றாக வேகவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, பப்பாளியில் உள்ள என்சைம்களும் அதோடு சேர்ந்து, அதிகம் சாப்பிட்டாலும் அஜீரணம் தோன்றக்கூடாது என்பதற்காக! அசைவ உணவுகளில் புரோட்டீன் அதிகம் இருக்கிறது.

அவை முழுமையாக ஜீரணம் ஆகவேண்டும் என்றால் பேப்பைன் அவசியம். பப்பாளி இலையில் சிறிது நேரம் இறைச்சியை பொதிந்துவைத்துவிட்டு, நறுக்கி சமைப்பதும் ஜீரணத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. சிறுநீரக கற்களால் அவதிப்படுகிறவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

அந்த தொந்தரவு இருப்பவர்கள் பப்பாளி காயை துருவி, சாலட் போன்று தயாரித்து சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும். பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு சாப்பிடக்கொடுங்கள். வயிற்றில் இருக்கும் தேவையற்ற பூச்சி தொந்தரவை அது போக்கும். பெண்களில் பலர் சீரற்ற மாதவிலக்கால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் அந்த தொந்தரவில் இருந்து விடுபட பப் பாளியை அன்றாடம் உணவில் சேர்க்கவேண்டும்.

பப்பாளியில் விதவிதமான உணவு வகைகளை தயாரிக்க தாய்மார்கள் கற்றுக்கொள்ளவேண்டும். அதை ருசியாக தயாரித்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அதன் மூலம் குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். பப்பாளி வேருக்கும் மருத்துவ குணம் உண்டு.

அதனை சுத்தம் செய்து வேகவைத்து, கஷாயத்தை தினமும் அரை கப் வீதம் குடித்தால் பல்வேறு விதமான கட்டிகளும், பருக்களும் குணமாக வாய்ப்பிருக்கிறது. பப்பாளி பாலில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் கிருமி தொந்தரவு ஏற்படாது.

பழுத்த பப்பாளியின் தசை பகுதியை எடுத்து பிசைந்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் வைத்திருந்து முகத்தை கழுவுங்கள். சரும சுருக்கம், படை போன்றவை நீங்கி, முகம் ஜொலிக்கும். பப்பாளி பழத்தை ஆண்கள் தினமும் சாப்பிட்டால் அவர்களது தாம்பத்ய சக்தி அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. தாய்ப்பால் புகட்டும் பெண்கள் தினமும் பப்பாளி பழம் சாப்பிட வேண்டும்.

அதன் மூலம் பால் பெருகும். நரம்பு வலியால் அவதிப்படுகிறவர்கள் பப்பாளி இலையை கொதித்த நீரில் முக்கியோ, தீயில் சுட்டோ வலியுள்ள பகுதியில் வைத்தால், வலி குறைந்துவிடும். பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். ஏன்என்றால் பெண்களின் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதில் இருக்கின்றன.

குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், பப்பாளி பழம் சாப்பிடுகிறவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. 100 கிராம் பப்பாளியில் கிட்டத்தட்ட 2500 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ சத்து இருக்கிறது. அதனால் பப்பாளி சாப்பிட்டால், பார்வை சக்தி அதிகரிக்கும். பப்பாளி பழம் அடிக்கடி சாப்பிடுவது பற்களின் நலனுக்கும் ஏற்றது.

பப்பாளியில் சூப் தயாரித்து பருகுவதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஓய்வற்ற உழைப்பு, மனஅழுத்தம் நிறைந்த வேலை, உடற்பயிற்சியின்மை போன்றவைகளால் கழுத்து வலி, முதுகுவலி, முதுகு சவ்வு தேய்தல் போன்ற பாதிப்புகளால் நிறையபேர் அவதிப்படுகிறார்கள்.

அந்த பாதிப்புளை கட்டுப்படுத்தும் சக்தி, பேப்பைன் என் சைம்க்கு இருக்கிறது. அதனால் வலியும், நோயுமின்றி வாழ விரும்புகிறவர்கள் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிடவேண்டும்.

விளக்கம்:
டாக்டர் ஆர்.பத்மபிரியா,
சென்னை-42.
  

2 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

இப்போது கோவையில் பப்பாளி கிலோ 30 ரூபாய்க்கு விற்கிறது.

pasumai herbals dindigul சொன்னது…

ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் அனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் ...கலப்படம் இல்லாத. ..ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123

கருத்துரையிடுக