செவ்வாய், ஜனவரி 01, 2013

புத்தாண்டுக் கவிதை
 
மங்களம் பொங்கும் இங்கித ஆண்டு
 
மங்களம் பொங்கி எழ
மாருதம் வீசி வர
திங்கள் இளங் கதிரோன்
தன் கதிர்  பரப்பி நிற்க
இங்கிதம் பேசும் இல்லங்கள் வாழ
இனிய புத்தாண்டாய் பிறந்து வா!
சங்கு முழங்கி உரைக்கும் தமிழில்
சான்றுகள் பிறக்கும் புத்தாண்டாய் வா!

அழுவார்  குரல்கள் அகிலத்தில் மறைய
அவல வாழ்வு மண்ணில் நீங்க
உழுவார்  கரங்கள் உழைப்பில் உயர
உண்மை நலங்கள் எங்கும் பெருக
எழுவோர் மனங்களில் நல்லொளி பிறக்க
எங்கும் எதிலும் ஒற்றுமை வளர
தொழுவார்  கரங்கள் இறைவனைப்பற்ற
தீமை அகற்றும் புத்தாண்டாய் மலர்வாய்

.பாரினில் தமிழ் மண் ஏற்றம் பெறவே
பகைமை நீங்கி சமாதானம் உறவே 
ர்கள் எல்லாம் உயார்வாய் மாற
உலகம் எங்கும் கலகம் நீங்க
ரால் மருதம் விளைச்சல் பெருக
ஏங்கியோர் வாழ்வு ஏற்றம் பெற்றிட 
வேதனை கொண்ட மாந்தர்தம்-வாழ்வில் 
விடிவு பிறக்கும் புத்தாண்டே வருவாய்!

'கவிவித்தகர்' பாலன் சேவியர், 
அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக