வெள்ளி, ஜனவரி 11, 2013

இன்றைய பொன்மொழி

 காஞ்சிப் பெரியவர் 
 

பாவ சிந்தனைகளைப் போக்குகிற புண்ணிய சிந்தனைதான் பரோபகாரம், சேவை மனப்பான்மை, தியாகம் எல்லாம். இதைப் பொதுவாக 'அன்பு' என்று சொல்லலாம். "தனக்கு" என்கிற அரிப்பு எதுவுமில்லாமல் அசூயை, வஞ்சனை எதுவுமே இல்லாமல் காரியம் செய்கிறபோதுதான் அக்காரியத்தில் முழு ஈடுபாடு உண்டாகிறது. நாம் செய்கிற கருமம் எவ்வாறு பாவம் ஆகிறது என்றால் "நமக்காக" என்று ஆசை வசப்பட்டு ஏதோ ஒரு லட்சியத்தைப் பிடிக்கிறபோது இந்த லட்சியப் பூர்த்திக்காக எவ்வித தவறையும் செய்யத் துணிகிறோம். இதனால் மனதில் வெறுப்பு மனப்பான்மை, துக்கம், பயம் ஆகிய அழுக்குகளை ஏற்றிக் கொண்டு விடுகிறோம். இதனைத் தொடர்ந்து வருவதே பாவச் செயல்கள் ஆகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக