வியாழன், ஜனவரி 10, 2013

சுத்தம் சுகாதாரம்... அவசியம்!

சுத்தம் சுகாதாரம்... அவசியம்!நண்பன் குடித்த பாட்டிலை வாங்கி, வாய் வைத்து தண்ணீர் குடிப்பது, ஒரே டம்ளரில் டீ குடிப்பது, ஒருவர் கர்சீப்பை இன்னொருவர் துடைத்துக் கொள்வது, தோழி சுவைத்த சாக்லெட்டை வாங்கி கடிப்பது... இது போன்ற விஷயங்களை நட்பின் நெருக்கத்தை வெளிக்காட்டுவதற்காக சிலர் செய்யலாம். ஆனால், அதனால் எந்த அளவுக்கு தொற்றுநோய் பிரச்னை ஏற்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. சிறிய விஷயமானாலும், கவனமாக இருந்தால், ஆரோக்கியத்துக்கு குறைவிருக்காது. உங்களை பரிசோதிக்கும் டாக்டரை பாருங்கள்; அவர் பரிசோதித்த பின், டெட்டால் திரவத்தை கையில் தடவிக்கொள்வார்; சோப்பினால் கையை கழுவுவார்.
அப்படியிருக்கும் போது, நாம் கை, கால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டாமா? சுத்தம் இருந்தால், பாதி உடல் கோளாறுகளை தவிர்க்கலாம். திறந்து வைத்த சாப்பாடு, குழம்பு, கறி வகைகள், ஈ மொய்த்த பண்டங்கள் போன்றவற்றால் தான் பல தொற்றுநோய்கள் நம்மை தாக்குகின்றன.
காலை, மாலை குளிப்பது, பல் தேய்ப்பது, கை, கால்களை சுத்தமாக வைத்திருப்பது, வீட்டில் தூசி படியாமல் பார்த்துக்கொள்வது, அதிக வேலை செய்யாமலும், அதே சமயம் சுறுசுறுப்பு குறையாமலும் இருப்பது, வெளியில் சாப்பிடுவதை தவிர்ப்பது, குளிர் பானம் போன்றவற்றை குறைப்பது, முடிந்தவரை வாகனத்தை தவிர்த்து நடப்பது, யோகா போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவது போன்றவை மட்டுமே, உங்களுக்கு நாற்பதில் சர்க்கரை, ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும் வழிகள். டீன் ஏஜில் இருப்பவர்கள் இதை இப்போதே உணர்ந்து செயல்பட்டால், கண்டிப்பாக எந்த ஆரோக்கிய குறைவும் ஏற்படாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம். 
நன்றி: மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக