ஆக்கம்: வினோ ரூபி, சென்னை இந்தியா

குறிப்பாக சிறந்த கண் பார்வைக்கும், சருமத்தின் பொலிவுக்கும் மீன் உணவு உதவும். தற்போது கூடுதலாக நரம்பு மண்டலத்தின் உறுதிக்கும் மீன் அத்தியாவசியமானது என்று தெரியவந்துள்ளது.
அனைத்து வகை மீன்களிலும் ஒமேகா-3 என்ற கொழுப்புசத்து உண்டு. இந்தக் கொழுப்புச்சத்தில் இரண்டு வகை இருப்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இவற்றுக்கு டி.எச்.ஏ, இ.பி.ஏ. என்று பெயரிட்டு உள்ளனர்.
ஒமேகா-3 குறைபாடு ஏற்பட்டால் இதயவியாதி, நினைவுத்திறன் குறைபாடு, பைபோலார் எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். தற்போது ஒமேகா-3ன் உட்பிரிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் அந்தந்த வியாதியோடு தொடர்புடைய சத்துக்குறைவு தெளிவாகி இருக்கிறது.
இ.பி.ஏ. என்ற வேதிப்பொருள் மூளையுடன் சம்பந்தப்பட்டது. எனவே நினைவுத்திறனில் பாதிப்பு வருவதற்கு இ.பி.ஏ குறைபாடும் ஒரு காரணம். அதேபோல் இரு ரசாயனங்களும் நரம்புகளை சுற்றி இருக்கும் கொழுப்புபடலமாக இருப்பதால் நரம்பு மண்டல உறுதிக்கும் அவை காரணமாக இருக்கிறது.
எனவே தேவையான அளவு மீன் உணவு சாப்பிட்டு ஒமேகா-3 அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் நரம்பு மண்டலம் உறுதி பெறும்.
நரம்பு மண்டலம் பலப்பட்டால் உடலும் உறுதிபெறும் என்பது உண்மை. ஆய்வாளர் நார்மன் சலீம் கூறும் போது, கொழுப்பு கெட்டது என்ற எண்ணத்தை மாற்றக்கூடியது ஒமேகா-3. எல்லோரது உணவிலும் டி.எச்.ஏ சீராக கலந்திருப்பது உடல்நலத்துக்கு சிறந்தது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக