செவ்வாய், பிப்ரவரி 07, 2012

நாடுகாண் பயணம் - எஸ்தோனியா

நாட்டின் பெயர்:
எஸ்தோனியா (Estonia)

வேறு பெயர்கள்:
எஸ்தோனியக் குடியரசு(Republic of Estonia)

அமைவிடம்:
வடக்கு ஐரோப்பா 

எல்லைகள்:
வடக்கில் - பின்லாந்து வளைகுடா 
தெற்கில் - லதுவியா
கிழக்கில் - பெப்சி ஏரி மற்றும் ரஷ்யா 
மேற்கில் - பால்டிக் கடல் 
மற்றும் பால்டிக் கடலுக்கு அப்பால் மேற்கில் சுவீடனும், வடக்கில் பின்லாந்தும் உள்ளன.


தலைநகரம்:
டல்லின்(Tallinn)

அலுவலக மொழி:
எஸ்தோனியன்


ஏனைய மொழிகள்:
ரஷ்யன் மற்றும் சிறிய அளவில் ஏனைய மொழிகள்.

சமயங்கள்:
சமய நம்பிக்கை இல்லாதோர்(ஈடுபாடு இல்லாதோர்) 66%
எவாஞ்சலிக்கல் லுத்தரன் 13,6%
பழமைவாதக் கிறீஸ்தவம் 12,8%
கிறீஸ்தவர் 1,4%

இனங்கள்:
எஸ்தோனியர்கள் 69%
ரஷ்யர்கள் 25.5%
உக்ரேனியர்கள் 2%
பெலாருஷ்யர்கள் 1%
பின்கள்(பின்லாந்துக்காரர்கள்) 0.8%
ஏனையோர் 1.6% 

கல்வியறிவு:
99.8%
*வல்லரசுகளின் ஆட்சியால் குறிப்பாக ரஷ்யாவின் ஆட்சியினால் ஏற்பட்ட நன்மைகளில் ஒன்று.


ஆயுட்காலம்:
ஆண்கள் 68 வருடங்கள் 
பெண்கள் 79 வருடங்கள் 

ஆட்சிமுறை:
பாராளுமன்ற மக்களாட்சி 

ஜனாதிபதி:
டூமாஸ் ஹென்றிக் லைவ்ஸ்(Toomas Hendrik lives)
*இது 07.02.2012 அன்று உள்ள நிலவரமாகும்.

பிரதமர்:
அண்ட்ருஸ் அன்சிப்(Andrus Ansip)

*இது 07.02.2012 அன்று உள்ள நிலவரமாகும்.

ரஷ்யாவிடமிருந்து முதல் தடவை சுதந்திரம்:
02.02.1920

மீண்டும் ரஷ்யாவின் ஆளுகைக்குள் வந்த ஆண்டு:
1941

ஜெர்மனியால் கைப்பற்றப்பட்டு ஆளப்பட்ட காலம்:
1941-1944 

மீண்டும் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டு ஆளப்பட்ட காலப்பகுதி:
1944-1991

ரஷ்யாவிடமிருந்து முற்று முழுதாக விடுதலை:
20.08.1991

பரப்பளவு:
45,227 சதுர கிலோ மீட்டர்கள்


சனத்தொகை:
1,340,194(2010 மதிப்பீடு)


நாணயம்:
யூரோ
*ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு என்பதால் 2011 ஆம் ஆண்டு தொடக்கம் யூரோ புழக்கத்திற்கு வந்தது. அதற்கு முன்னர் இந்நாட்டின் நாணயமாக எஸ்தோனியன் குரூன்(Estonian Kroon) இருந்தது.


இணையத் தளக் குறியீடு:
.ee

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 372


வேலையில்லாத் திண்டாட்டம்:
13%

வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வோர்:
19,7%


இயற்கை வளங்கள்:
எரிபொருள், சுண்ணாம்புக் கல், காடுகள், பொஸ்பேட், கருங்கல்(மாபிள் கல்/கிரனைட் கல்), யுரேனியம், லோப்பாரிட்.


விவசாய உற்பத்திகள்:
தானியங்கள், உருளைக் கிழங்கு, காய்கறிகள், கால்நடைகள், பாற்பண்ணை உற்பத்திகள், மீன்.

வருமானம் தரும் தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள்:
பொறியியல் சேவை, கணனித் தொழில் நுட்பம், தகவற் தொழில்நுட்பச் சேவை, மின்சார உபகரணங்கள், மரங்கள் மற்றும் மரத் தளபாடங்கள், துணி வகைகள் உற்பத்தி.

ஏற்றுமதிகள்:
இயந்திரங்கள், இலத்திரனியல்(மின்சார) உபகரணங்கள், மரம் மற்றும் மரத் தளபாடங்கள், உலோகங்கள், வாகன உதிரிப் பாகங்கள், உணவு மற்றும் மதுபான வகைகள் உற்பத்தி, துணிவகைகள், பிளாஸ்டிக்.


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தனிநபர் வருமானம் கூடிய நாடு.
  • உலகில் பத்திரிகைச் சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம், ஜனநாயகம், அரசியல், கல்வி உரிமைகள் அதிகமுள்ள நாடுகளில் ஒன்று.
  • ஆள்வீத வருமானம் அதிகமுள்ள நாடாக இருப்பினும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்ற மக்களையும் கொண்ட நாடு.
  • ரஷ்யா, ஜெர்மனி போன்ற வல்லரசுகளாலும், டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகளாலும் ஆளப்பட்ட வரலாற்றைக் கொண்ட நாடு இது.
  • ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் நேட்டோ(NATO) போன்ற அமைப்புகளின் அங்கத்துவ நாடு.
  • கணனித் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக வருமானத்தைச் சம்பாதிக்கும் நாடு.
  •  கணனியில் எதிர் முனையில் உள்ளவரைப் பார்த்துகொண்டு உரையாடும் ஸ்கைப்(Skype) தொலைத் தொடர்பு முறையை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் இந்நாட்டுத் தொழில்நுட்ப நிபுணர்களே ஆவர்.(தகவலுக்கு நன்றி:en.wikipedia.org)
  • உலகில் சமயச் சார்பு அதிகம் இல்லாத, சமயத்தில் நாட்டமில்லாத அதிகளவு மக்களைக் கொண்ட நாடு.
  • இந்நாட்டைச் சேர்ந்த பல ஆயிரக் கணக்கான பெண்கள் பாலியல் அடிமைகளாக பின்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் கடத்தப் படுகின்றனர்.
  • இந்நாட்டைச் சேர்ந்த பல ஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் குறைந்த கூலியில் வேலை செய்வதற்காக ஸ்பெயின், சுவீடன், நோர்வே, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பப் பட்டு, அவர்களின் உழைப்பு இடைத் தரகர்களால் சுரண்டப்படுகிறது.
  • 2004 ஆம் ஆண்டு தொடக்கம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக இணைந்தபோதும், ஐரோப்பிய ஒன்றிய விசா நடைமுறையை(Schengen Agreement) ஒழுங்காக நடைமுறைப்படுத்தாததால் ரஷ்யாவிலிருந்து பல சட்டவிரோதக் குடியேறிகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைவதற்கான வாசலாக இருப்பதாக ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் குற்றம் சாட்டப் படுகின்றது.  

4 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

I will read inthe evening.Congratz!Anthimaalai....

vetha (kovaikkavi) சொன்னது…

''..கணனியில் எதிர் முனையில் உள்ளவரைப் பார்த்துகொண்டு உரையாடும் ஸ்கைப்(Skype) தொலைத் தொடர்பு முறையை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் இந்நாட்டுத் தொழில்நுட்ப நிபுணர்களே ஆவர்..''
உலகமே பாவித்து மகிழும் விடயம் நன்றி கூற வேண்டுமல்லவா!....
அந்தி மாலைக்கும் மிக்க நன்றி

ஆசிரியர், அந்திமாலை. சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி. மேலும் ஒரு தகவலை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். மேற்படி ஸ்கைப்(Skype) தொலைத்தொடர்புத் தொழில்நுட்பம் 2003 ஆம் ஆண்டில் எஸ்தோனிய நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டாலும், மேற்படி நிறுவனத்தில் பணியாற்றும் டேனிஷ்(டென்மார்க்) கணனித் தொழில்நுட்பவியலாளர் Janus Friss என்பவராலும், சுவீடிஷ்(சுவீடன்) கணனித் தொழில்நுட்பவியலாளர் Niklas Mårten Zennström ஆகிய இருவராலுமே மேற்படி தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப் பட்டது.
மேற்படி தொழில்நுட்பத்தை உருவாக்கியபோது டேனிஷ் தொழில்நுட்பவியலாலரின் வயது 27, மற்றும் சுவீடிஷ் தொழில்நுட்பவியலாளரின் வயது 37 ஆகும். உலகம் முழுவதும் ஸ்கைப் தொழில்நுட்பத்தை உபயோகிக்கும் 66.3 கோடி பாவனையாளர்கள் இவ்விரு தொழில்நுட்பவியலாளர்களுக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதுடன் டென்மார்க்,சுவீடன் மக்கள்(நாமும்தான்) மிகவும் பெருமைப்பட வேண்டிய விடயமுமாகும்.

vetha (kovaikkavi) சொன்னது…

mmmmm.....மிகவும் பெருமைப்பட வேண்டிய விடயம்.
nanry....

கருத்துரையிடுக