செவ்வாய், பிப்ரவரி 21, 2012

நாடுகாண் பயணம் - போக்லாந்து தீவுகள்

தீவுக் கூட்டங்களின் பெயர்:
போக்லாந்துத் தீவுகள்(Falkland Islands) 


வேறு பெயர்கள்:
பால்க்லாந்துத் தீவுகள் அல்லது மல்வினஸ்(Islas Malvinas)


அமைவிடம்:
தெற்கு அத்திலாந்திக் சமுத்திரம்.


எல்லைகள்:
தீவுகள் என்பதால் நான்கு பக்கமும் தெற்கு அத்திலாத்திக் சமுத்திரம் இருப்பினும் கடலுக்கு அப்பால் மேற்குப் பக்கத்தில் ஆர்ஜென்டீனா.


பூகோள அமைப்பு:
இரண்டு பெரிய தீவுகளையும் 776 சிறிய தீவுகளையும் கொண்டது.


தலைநகரம்:
ஸ்டான்லி((Stanley)


பெரிய நகரம்:
ஸ்டான்லி((Stanley)


அலுவலக மொழி:
ஆங்கிலம் 


இனங்கள்:
போக்லாந்தர்கள்(Falkland Islander) 61%
பிரித்தானியர்(British) 29%
ஸ்பானியர்கள்(Spanish) 2,6%
ஜப்பானியர்கள் 0,6%
சிலியர்கள்(Chilean) 6,5%


சமயங்கள்:
கிறீஸ்தவம் 67,2%
சமயம் சாராதோர் 31,5%
ஏனைய சமயங்களைச் சேர்ந்தோர் 1,3%


ஆட்சிமுறை:
பிரித்தானியாவின் கடல்கடந்த ஆட்சிப் பகுதி.(சம்பிரதாயபூர்வமான அரசியையும் பாராளுமன்றத்தையும் கொண்ட மற்றொரு நாட்டின் இறைமையில் தங்கியிருக்கும் பிரதேசம்).


நாட்டின் தலைவி:
மாட்சிமை தங்கிய இரண்டாவது எலிசபெத்(இங்கிலாந்து அரசி)


ஆளுநர்:
நீஜெல் ஹேய்வூட்(Nigel Haywood)*இது 21.02.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.


தலைமைப் பிரதிநிதி:
கீத் பட்ஜெட் (Keith Padget)*இது 21.02.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.


பிரித்தானிய ஆட்சி புதுப்பிக்கப்பட்ட தேதி:
05.01.1833 
ஆர்ஜென்டீனா நாட்டினால் கைப்பற்றப்பட்ட தேதி:
02.04.1982


ஆர்ஜென்டீனாவிடமிருந்து விடுவிக்கப்பட்ட தேதி:
14.06.1982


தற்போதைய அரசியல் யாப்பு வரையப்பட்ட தேதி:
01.01.2009 


பரப்பளவு:
12,173 சதுர கிலோ மீட்டர்கள்


சனத்தொகை:
3140 பேர்(2008 மதிப்பீடு)


நாணயம்:
போக்லாந்துத் தீவுகளின் பவுண்டு(Falkland Islands Pound / FKP)


இணையத் தளக் குறியீடு:
.fk


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 500


வருமானம் தரும் தொழில்கள்:
விவசாயம், மீன்பிடி, கம்பளி தயாரிப்பு, மந்தை வளர்ப்பு, சுற்றுலாத் துறை.


விவசாய உற்பத்திகள்:
விலங்குகளின் உணவுகள், காய்கறிகள், செம்மறி ஆடு, பாற்பொருட்கள்(பால்), மீன், கணவாய்.


ஏற்றுமதிகள்:
கம்பளி, மிருகங்களின் தோல், இறைச்சி, மீன், கணவாய்.


தீவுக் கூட்டங்களைப் பற்றிய சிறு குறிப்புகள்:
 • இத் தீவு முழுமையாக பிரித்தானிய அரசின் மேற்பார்வையின் கீழ் வரம்புக்கு உட்பட்ட சுதந்திரத்துடன் இயங்குகிறது. தீவின் பாதுகாப்பு பிரித்தானிய அரசைச் சார்ந்தது. இத் தீவில் பிரித்தானியப் படையினர் நிலை கொண்டுள்ளனர்.
 • இத் தீவானது ஐக்கிய நாடுகள் சபையினால் இறைமையுள்ள ஆட்சிப் பிரதேசம் என அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
 • இத் தீவில் 1850 ஆண்டளவில் குடியேறியவர்களின் அல்லது வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை 284 ஆகும். இத் தீவின் ஆதிக் குடிகள் ஸ்கொட்லாந்துக் காரர்கள், பிரெஞ்சு வம்சாவளியினர், ஜிப்ரோல்டர் வம்சாவளியினர் மற்றும் ஸ்கன்டிநேவியர்கள் ஆவர்.
 • இத் தீவைக் காலம் காலமாக அண்டை நாடாகிய ஆர்ஜென்டீனா உரிமை கோரி வருகிறது. மேற்படி தீவுகளின் இறைமை சம்பந்தமாக பிரித்தானியாவுக்கும் ஆர்ஜென்டீனாவுக்கும் பல தசாப்தங்கள் இழுபறி நிலவியது. இதனாலேயே இத் தீவுகளின் மீது ஆர்ஜென்டீனா 1982 ஆண்டில் படையெடுத்து தீவுகளைக் கைப்பற்றிக் கொண்டது. இருப்பினும் பிரித்தானியப் படையினர் கடும் போர் புரிந்து தீவுகளை திரும்பக் கைப்பற்றிக் கொண்டனர். ஆர்ஜென்டீனா பலத்த தோல்வியுடன் பின்வாங்கிக் கொண்டது.
 • இத் தீவின் இறைமை சம்பந்தமாக பேசுவதற்கு ஆர்ஜென்டீனா விடுக்கும் அழைப்புகளை பிரித்தானியா ஏற்றுக் கொள்வதில்லை.
 • அரசியல் சாசனப்படி இத் தீவுகளின் மக்கள் 'பிரித்தானியப் பிரஜைகள்' ஆவர். இவர்கள் விரும்பினால் ஆர்ஜென்டீனக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.
 • இத் தீவு மக்களில் பெரும்பாலானவர்கள்(95%) வருமானத்திற்காக விவசாயத்தையே நம்பி உள்ளனர். அண்மைக் காலங்களில் இத் தீவுகளின் கடற்கரை ஓரங்களில் பெற்றோலியம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
 • தீவைச் சுற்றலும் 786 கிலோ மீட்டர் நீளமான வீதிகள் அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தீவில் மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீட்டர் (40km/h) எனும் வேகத்தில் மட்டுமே வாகனம் செலுத்த வேண்டும்.
 • தீவில் The Penguin News மற்றும் Teaberry Express ஆகிய இரு வாராந்தப் பத்திரிகைகள் வெளியாகின்றன.
 • தீவில் சுமாராக 1000 பேர் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைத்திருக்கின்றனர்.
 • தீவில் 1000 இற்கு மேற்பட்டோர் வானொலிப் பெட்டிகள் வைத்திருக்கின்றனர்.
 • இத் தீவில் BFBS1 மற்றும் KTV Ltd ஆகிய பெயர்கொண்ட உள்ளூர்த் தொலைக்காட்சிச் சேவைகள் இயங்கி வருகின்றன. 
 • BBC, CNN ஆகிய தொலைக்காட்சிச் சேவைகளின் ஒளிபரப்பை கேபிள் ஊடாகக் கண்டு களிக்க முடியும்.
 • தீவில் 7 பண்பலை வானொலி ஒலிபரப்புகளும், Falkland Islands Radio Service(FIRS) எனும் பெயர் கொண்ட மத்திய அலை வானொலி ஒலிபரப்பும் நடைபெறுகிறது.
 • தீவில் இரண்டு விமான நிலையங்கள் இயங்குகின்றன.
 • தீவில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ மனை ஒன்று இயங்கி வருகிறது. மேலதிக சிகிச்சை தேவைப் படுவோர் பிரித்தானியாவுக்கோ அல்லது சிலி நாட்டின் தலைநகர் சண்டியாகோவுக்கோ(Santiago) விமான மூலம் அழைத்துச் செல்லப் படுவர்.
 • தீவில் உள்ள ஒரேயொரு பாடசாலையில் சுமார் 380 மாணவர்கள் முதலாம் வகுப்பு தொடக்கம் 10 ஆம் வகுப்புவரை கல்வி கற்கின்றனர். உயர்தரக் கல்வியை(Advanced Level) இங்கிலாந்தில் தொடர விரும்பும் இத் தீவின் மாணவர்கள் இங்கிலாந்தில் அவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள இரண்டு கல்லூரிகளில் தமது உயர் கல்வியைத் தொடர முடியும். 

3 கருத்துகள்:

Suthan சொன்னது…

Good. i am happy to reading like this counry NEWS polanth people are also poor.

vetha (kovaikkavi) சொன்னது…

''...தீவில் உள்ள ஒரேயொரு பாடசாலையில் சுமார் 380 மாணவர்கள் முதலாம் வகுப்பு தொடக்கம் 10 ஆம் வகுப்புவரை கல்வி கற்கின்றனர். உயர்தரக் கல்வியை(Advanced Level) இங்கிலாந்தில் தொடர விரும்பும் இத் தீவின் மாணவர்கள் இங்கிலாந்தில் அவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள இரண்டு கல்லூரிகளில் தமது உயர் கல்வியைத் தொடர முடியும்....''
மிக முக்கியமான தகவல் அன்றோ!
நன்றி.

Balan சொன்னது…

Thanks a lot to Anthimaalai.

கருத்துரையிடுக