செவ்வாய், ஜனவரி 18, 2011

நாடுகாண் பயணம் - அக்ரோடிரி மற்றும் டெகேலியா
நாட்டின் பெயர்:
அக்ரோடிரி மற்றும் டெகேலியா 
(Akrotiri and Dhekelia)flag of Akrotiri and Dhekelia

நிலப்பரப்பின் தகமை:
இறைமையுள்ள இராணுவப் பிரதேச நிலம்.
அமைவிடம்:
மேற்கு ஆசியா, சுயஸ் கால்வாய்க்கு அருகில்.

எல்லைகள்:
வடக்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் 'சைப்பிரஸ்' நாடு எல்லையாகவுள்ளது.
தெற்கு - மத்திய தரைக் கடல்.
ஆட்சிமுறை:
இங்கிலாந்தின் ஆட்சிக்குட்பட்ட ஆனால் முழு இறைமையுள்ள இராணுவ ஆட்சிப் பிரதேசம்.


நாட்டின் தலைவி:
இரண்டாவது எலிசபெத்(இங்கிலாந்து இராணி)


தலைநகரம் அல்லது நிர்வாகத் தலைமை மையம்:
எபிஸ்கொபி (Episkopi)


மொழிகள்:
ஆங்கிலம் மற்றும் கிரேக்க மொழி 


சமயங்கள்:
புரட்டஸ்தாந்து மற்றும் கிரேக்கப் பழமைவாதச் சமயம்.


நிர்வாகி:
ஜெமி கோர்டன் (Jamie Gordon)


பிரித்தானியாவின் கடல் கடந்த பிரதேசமாகிய ஆண்டு:
1960


பரப்பளவு:
254 சதுர கிலோமீட்டர்கள்.


சனத்தொகை:
ஏறத்தாழ 14500
இவர்களில் சுமார் 7000 பேர் வரையில் சைப்பிரியர்கள், 7500 பேர் வரையில் பிரித்தானிய படையினர் மற்றும் அவர்தம் குடும்பத்தவர்.


நாணயம்:
யூரோ.


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-357


சிறு குறிப்புகள்:

  • ஓரளவு சனத்தொகையைக் கொண்ட நிலப் பிரதேசமாக இருப்பினும் இங்கு தனியாகத் தேர்தல்கள் நடைபெறுவதில்லை. பிரித்தானியாவில் தேர்தல்கள் நடைபெறும்போது இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் 'கடல் கடந்த பிரித்தானிய மக்கள்' எனும் தகைமையின் கீழ் வாக்களிப்பர்.
  • இப்பிரதேசத்தின் ஆட்சியலுவல்கள் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் பொறுப்புக்கு உட்பட்டவை.
  • சைப்பிரசின் தலைநகர் நிக்கோசியாவில் ஒரு பிரித்தானியத் தூதரகம் அமைந்துள்ள போதும்,  இப்பிரதேசத்து நிர்வாகச் செயற்பாடுகள் யாவும் பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு உடையவை ஆகும்.
  • இராணுவத் தேவைகளுக்காக உபயோகிக்கப்படும் பிரதேசம் என்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கும், வர்த்தக நடவடிக்கைகளுக்கும் அனுமதி கிடையாது.
  • இப்பிரதேசம் தனக்கென தனியான சட்ட திட்டங்களைக் கொண்டுள்ளது. இப்பிரதேசத்துக்கென தனியான நீதிமன்றமும் உள்ளது.
  • பிரதேசத்தின் இருபது சதவீதமான பகுதியில் விவசாயம் செய்யப்படுகிறது. இருப்பினும் இப்பிரதேசத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
  • இராணுவப் பயிற்சிகள் தவிர்ந்த ஏனைய உற்பத்தி நடவடிக்கைகள் ஏதும் நடைபெறாத காரணத்தால் ஏற்றுமதி என்று எதுவும் கிடையாது.

2 கருத்துகள்:

Karan Uk சொன்னது…

I like et.

suthan சொன்னது…

i like read this webside i wish to anthimaalai

கருத்துரையிடுக