
ஆக்கம்.இ.சொ.லிங்கதாசன்
இம்மரத்தை (Evergreen Coniferous Tree) கிறிஸ்துமஸ் பண்டிகையில் அலங்கரித்து மகிழும் வழக்கம் 16 ஆம் நூற்றாண்டில் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான 'லித்துவேனியாவிலும்', ஜேர்மனியிலும் ஆரம்பித்தது என்று நம்பப்படுகிறது. தற்காலத்தில் இம்மரமானது மணிகள், எடை குறைந்த வர்ண உருண்டைகள், நகைகள், இனிப்புகள், மலர்கள், வண்ண அலங்காரங்கள், சிறிய தேவதைகளின் திரு உருவங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப் படுகின்றது. இம்மரத்தின் உச்சியில் ஒரு உலோகத்தால்/ரப்பரால் ஆன ஒரு நட்சத்திரம் அல்லது ஒரு தேவதையின் உருவம் வைக்கப்படும். இது தேவ குமாரனாம் இயேசு பெத்லகேமில் பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தை அல்லது தேவதைகளை(இலங்கைத் தமிழில் 'சம்மனசுகள்') நினைவூட்டுவதற்கான சின்னமாகும்.மேலும் சமயத் தலைவர்களின் கருத்துப்படி ஐரோப்பாவில் கிறிஸ்துமஸ் மரம் அறிமுகப்படுத்தப் படுவதற்கு கிறீஸ்தவ மதத் துறவியாகிய புனித.பொனிபாஸ் (St.Boniface) என்பவர் காரணமாக இருந்துள்ளார். இம்மரம் அறிமுகப் படுத்தப்பட்ட காலத்தில் தற்போதுள்ளதைப் போல் செயற்கை அலங்காரப் பொருட்கள் தொங்கவிடப் படவில்லை என்பதுடன், அவைகளுக்குப் பதிலாக அப்பிள் பழங்கள், கடலைகள், பேரீச்சம் பழங்கள், போன்ற உண்ணத்தக்க பழவகைகளும், கடதாசிப் பூக்களும் தொங்கவிடப்பட்டன. கொண்டாட்ட முடிவில் இப்பழங்களை உண்ணுவதும் வழக்கமாக இருந்தது.
ஐரோப்பாவின் பல நாடுகள் கிறிஸ்துமஸ் மரத்தை 15 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்த ஆரம்பித்தபோதும், டென்மார்க்கில் முதல் முதலாக 1808 ஆம் ஆண்டிலேயே டேனிஷ் மக்கள் இம்மரத்தை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் உபயோகிக்க ஆரம்பித்தனர்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.
2 கருத்துகள்:
Well done
Can not wait for the next article, very interesting
கருத்துரையிடுக