செவ்வாய், ஜனவரி 11, 2011

நாடுகாண் பயணம் - அப்காசியா

நாட்டின் பெயர்:
அப்காசியா 



முழுப்பெயர்:
அப்காசியக் குடியரசு.


அமைவிடம்:
மேற்கு ஆசியா.

எல்லைகள்:
வடக்கு - ரஷ்யா 
தெற்கு - கருங்கடல் 
கிழக்கு - ஜோர்ஜியா 
மேற்கு - கருங்கடல் 


பரப்பளவு:
8,432 சதுர கிலோ மீட்டர்கள்.


சனத்தொகை:
216,௦௦௦ (2003 மதிப்பீடு)


இந்நாட்டின் சுதந்திரப் பிரகடனத்தை இன்றுவரை மொத்தம் 6 நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன. அவையாவன:
ரஷ்யா, நிக்கரகுவா, வெனிசுவெலா, நௌரு, தெற்கு ஒசேட்டியா, டிரான்ஸ்நிஸ்ரியா.


தலைநகரம்:
சுக்குமி (Sukhumi)


அலுவலக மொழிகள்:
ஜோர்ஜியன், அப்காஸ், ரஷ்யன்.


ஏனைய மொழிகள்:
கொம்செட்சி, மிங்ரேலியன் 


கல்வியறிவு:
100%


ஆயுட்காலம்:
ஆண்கள்: 73 வருடங்கள் 
பெண்கள்: 80 வருடங்கள்.


சமயங்கள்:
கிறீஸ்தவம்: 60%
இஸ்லாம்: 16%
பகான்: 8% 


நாணயம்:
அப்காசியன் அப்சார், ரஷ்யன் ரூபிள் 


ஜனாதிபதி:
செர்கே பகாப்ஸ் (Sergei Bagapsh)


உப ஜனாதிபதி:
அலெக்சாண்டர் அன்க்வாப் (Alexander Ankvab)


பிரதமர்:
செர்கி சம்பா (Sergei Shamba)


ரஷ்யாவிடமிருந்து சுதந்திரமடைந்த திகதி:
20.06.1990


ஜோர்ஜியாவிடமிருந்து விடுதலை:
12.10.1999


முதல் தடவையாக சர்வதேச அங்கீகாரம்:
26.08.2008 


சர்வதேசத் தொலைபேசி:
௦௦-7-840, 00-995


ஏற்றுமதிப் பொருட்கள்:
தேயிலை, புகையிலை, திராட்சை இரசம்(வைன்), பழங்கள்.


நாட்டைப் பற்றிய சில குறிப்புகள்:

  • உலகின் பெரும்பாலான நாடுகள் அப்காசியாவை ஜோர்ஜியாவின் ஒரு பகுதி என்றே கருதுகின்றன.
  • ஜோர்ஜியாவும் அப்காசியாவை ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட தனது நாட்டின் ஒரு பகுதி என்றே கருதுகிறது.
  • 80% மான அப்காசியர்களுக்கு, வெளிநாட்டில் வாழும் ரஷ்யர்களுக்கு வழங்கப் படுவது போன்ற கடவுச் சீட்டு ரஷ்ய அரசாங்கத்தினால் வழங்கப் பட்டுள்ளது.
  • ரஷ்யர்களுக்கு இருக்கும் கடமைகளாகிய ரஷ்ய அரசிற்கு வரி செலுத்துதல், கட்டாய இராணுவ சேவை போன்ற கடமைகள் இந்நாட்டு மக்களுக்குக் கிடையாது.
  • ஐ.நாவும் அப்காசியாவை ஜோர்ஜியாவின் ஒரு பகுதியாகவே கருதுகிறது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக