சனி, ஜனவரி 15, 2011

குறள் காட்டும் பாதை

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!
வள்ளுவப் பெருந்தகையின் பிறந்ததினமாகிய இன்று தொடக்கம் அந்திமாலையில் தினமும் ஒரு குறளும் அதன் பொருளும் இடம்பெறவுள்ளன. மேற்படி திட்டத்திற்கு ஆலோசனை வழங்கிய எமது வாசகராகிய டென்மார்க், ரணாஸ் நகரத்தைச் சேர்ந்த திரு.கரன் பாலராஜா நடராஜா அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.


இன்றைய குறள்


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


பொருள்: எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மையானது 'அ'.அதுபோல உலகத்துக்கு முதன்மையானவன் இறைவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக