ஆக்கம். இ.சொ.லிங்கதாசன்
அவர்களின் படகு நீரைக் கிழித்துக்கொண்டு எதிர்த் திசையில் செல்ல ஆரம்பித்தபோது கரையில் நின்ற ஜெனோவா நாட்டு மீனவர்களோடு சேர்ந்து கொலம்பஸ்ஸின் தந்தையும் கைகளை அசைத்து அவர்களை மகிழ்வோடு வழியனுப்பி வைத்தார்.மிகவும் மகிழ்வோடு அவர்களை வழியனுப்பிவிட்டுத் திரும்பிய கொலம்பஸ்ஸின் தந்தை இப்போது ஒரு மிகப்பெரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியவரானார்.
அதாவது கொலம்பஸ் திருட்டுத் தனமாக எடுத்துக்கொண்டு சென்ற படகிற்குரிய பெறுமதியாகிய 200 புளோரின்களை(அக்காலத்து ஜெனோவா நாட்டு நாணயம்) படகிற்குச் சொந்தக் காரனாகிய ஒரு மீனவனுக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார். ஏழை நெசவுத் தொழிலாளியாகிய அத் தந்தையால் அவ்வளவு பெரிய தொகையை(இக்காலத்து நாணயத்தோடு ஒப்பிட்டால் 200 யூரோக்கள்) கொடுப்பதற்கு முடியாமல் போனது. இதற்காக தனது வீட்டிலிருந்த உலோகப் பாத்திரங்களையும், தனது கால்நடைகளையும், விற்கவேண்டிய நிலை அம்மனிதனுக்கு ஏற்பட்டது.
இவ்வாறெல்லாம் செய்தும்கூட மேற்படி தொகையை அவரால் முழுவதுமாக திருப்பிச் செலுத்த முடியவில்லை, இதனால் அவர்களது நாட்டு வழக்கப்படி அவ்வூரில் வாழ்ந்த பணக்காரர்களில் ஒருவனாகிய அம்மீனவர் தலைவனின் வீட்டில் சில மாதங்கள் அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அத்துடன் அடிமைகளாக இருப்பவர்கள் தேவாலயங்களில் நடைபெறும் 'பிரார்த்தனைகளில்' பங்குபற்றுவது தடைசெய்யப் பட்டிருந்ததால் கொலம்பஸ்ஸின் குடும்பத்தினர் தேவாலயங்களில் ஆராதனையில் பங்குபற்றுவது சில மாதங்கள் தடுக்கப் பட்டிருந்தது.
இவற்றுக்கெல்லாம் காராணமான தனது மகனை அந்தத் தந்தை, கோபம் பீறிட்டு எழும்போதெல்லாம் அடித்து, உதைத்துத் துன்புறுத்தினார். அவ்வாறு செய்யும்போது அந்தத் தந்தைக்குத் தெரியாது, அவர் நையப் புடைத்துக் கொண்டிருக்கின்ற அந்தச் சிறுவன் நாளை 'உலக சரித்திரத்தில்' முக்கிய இடம்பிடிக்கப் போகிறான் என்பது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.
3 கருத்துகள்:
Interesting to read about Columbus
Well Done.
this news very good interested
கருத்துரையிடுக