சனி, மே 03, 2014

வெயில் காலத்தில் வியர்வையை விரட்ட

கொளுத்தும் கோடை வெயிலால் நம் உடலிலும் வெப்பத்தின் தாக்கம் எதிரொலிக்கும். சிலருக்கு அதிக வியர்வையால் துர்நாற்ற பிரச்சினை ஏற்பட்டு, மனதும் உடலும் துவண்டு விடும். இந்தப் பிரச்சினைகளையும் வெயிலின் தாக்கத்தையும் விரட்டியடிக்க, சில யோசனைகள் இங்கே...

* தினமும், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக அளவு வெங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம். வெங்காயம், வெங்காயத்தாளை சமைக்காமல் பொடியாக நறுக்கி, சாலட்டுகள் சேர்த்துச் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

* பொதுவாக, வியர்வை அதிகமாக சுரக்கக்கூடிய உடல்வாகு உள்ளவர்கள், `வெங்காயம் சாப்பிட்டால் உடம்பில் நாற்றம் வீசுமோ...' என்று வெங்காயம் சேர்ப்பதையே தவிர்த்து விடுவார்கள். வெங்காயத்தை நறுக்கியதும் தண்ணீரில் அலசிவிட்டு, பிறகு பயன்படுத்தினால் நாற்றம் இருக்காது. வெங்காயத்தை அரைத்து மோரில் கலந்து பருகுவதும் பலன் தரும். நாள் முழுவதும் குலுமணாலியில் இருப்பது போல் உடம்பு குளுகுளுவென இருக்கும்.

* எப்போது பார்த்தாலும் சமையல் அறையிலேயே புழங்குவதைத் தவிர்த்து விட்டு, வாரத்தில் இரண்டு நாட்களாவது கிச்சனுக்கு லீவ் விட்டு விடலாம். அந்த நாட்களில், சமைத்த உணவுக்குப் பதிலாக,... கேரட், பீட்ரூட், வெள்ளரி, வெங்காயம், வெண்பூசனி, கோஸ், தக்காளி, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கி எலுமிச்சைச் சாறு சேர்த்து, சாலட்போல சாப் பிடலாம்.

மற்றொரு நாள் இந்தக் காய் கறிகளைத் துருவி, தயிர் சேர்த்து சாப்பிடலாம். இதே போல் முளைக் கட்டிய பயறு வகைகளையும் சாப்பிடுவதால் நல்ல குளுமை கிடைப்பதுடன், உடலை ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள முடியும்.

இந்த விஷயத்தில் ஓர் எச்சரிக்கை... `பச்சைக் காய்கறிகள் தானே' என்று சரிவர சுத்தம் செய்யாமல் சாப்பிட்டால், அவற்றின் தோலில் ஏதாவது கிருமிகள் இருந்தால், அது அப்படியே உங்கள் உடலுக்குள் ஊடுருவிவிடக்கூடும். அதனால், பலவிதமான ஆபத்துக்கள் கூட வரலாம். எனவே, நன்றாக சுத்தம் செய்து பயன்படுத்துங்கள்.

* வெளியில் செல்வதற்கு முன்பு, சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஒரு உருளைக்கிழங்கை பாலில் வேக வைத்து விடுங்கள். இதனுடன் வெங்காய ஜுஸ், தேன் இரண்டையும் தலா ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கலந்து, முகம், கை, கழுத்து போன்ற வெயில் படும் இடங்களில் பூசிக் குளியுங்கள்.

இந்த உருளை ப்ளீச் சருமத்தை பளிச் சென்று சுத்தமாக்கிவிடும். வெங்காயம் குளிர்ச்சியைக் கொடுக்கும். தேன் பளபளப்பாக்கும். இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமம் பாதுகாக்கப்படும்.

* தேங்காய் வழுக்கலுடன் ஒரு கப் இளநீர் கலந்து, அரைத்து உடம்பில் பூசி குளித்துப் பாருங்கள். வியர்வை மட்டுப்படுவதுடன், உடலும் குளிர்ச்சியாக இருக்கும். கலரையும் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

நன்றி: ராஜம் முரளி
மூலிகை அழகு கலை நிபுணர்

1 கருத்து:

Unknown சொன்னது…

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.

தற்போது பதிவை இணைக்கலாம்.

தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

www.Nikandu.com
நிகண்டு.காம்

கருத்துரையிடுக