திங்கள், மே 12, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 109 தகையணங்கு உறுத்தல்

பிணைஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணி எவனோ ஏதில தந்து. (1089)
 
பொருள்: பெண்மானைப் போன்ற அழகிய, அச்சப்படும் இளமைப்பார்வையும் நாணமும் உடைய இவளுக்குப் பொருத்தமில்லாத அணிகலன்களை இவள் அணிவது ஏனோ? இயற்கையிலேயே இளமை, நாணம் எனும் இரு அணிகலன்கள் கொண்ட இவளுக்கு புதிய அணிகலன்களால் அழகு ஒன்றும் அதிகரித்து விடப் போவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக