இன்றைய குறள்
அதிகாரம் 109 தகையணங்கு உறுத்தல்

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று. (1090)
பொருள்: மது தன்னை உண்டவர்களுக்கு(அருந்தியவர்களுக்கு) மாத்திரம் போதையைத் தரும். ஆனால் பேரழகும், இளமையும் கொண்ட ஒரு பெண்ணைப் பார்க்கும்போது ஏற்படும் காமமானது அவளைப் பார்க்கும்போதே போதையைத் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக