செவ்வாய், பிப்ரவரி 04, 2014

அந்த ஒரு லட்சம் வாசகர்களுக்கும் நன்றி.

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!
உங்களையும் எம்மையும் இணைக்கும் உறவுப் பாலமாகிய 'அந்திமாலையின்' உதயம் பற்றி மின்னஞ்சல் மூலமாகவும், முகநூல் ஊடாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் உங்களைத் தொடர்பு கொள்ள ஆரம்பித்து இன்றுடன் (04.02.2014) சுமாராக மூன்றேகால் வருடங்கள் ஆகின்றது. இந்தக் குறுகிய காலப் பகுதியில் எமக்கு நீங்கள் அளித்த ஆதரவு எம்மை நெகிழச் செய்கிறது. தொடர்ந்தும் இதே ஆதரவை நல்குவீர்கள் என்பது எங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை. உங்கள் ஆதரவுக்கு அந்திமாலையின் ஆசிரிய பீடம் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
கடந்த 20.09.2010 தொடக்கம் இன்று பிற்பகல் 16.15 மணிவரை உங்கள் அந்திமாலை இணையத்திற்கு வருகை தந்த வாசக அன்புள்ளங்களின் எண்ணிக்கை 120,809 (ஒரு லட்சத்து இருபதினாயிரத்து எண்ணூற்றொன்பது) ஆகும். எமது இணையப் பக்கத்தின் இடது பக்கத்தில் காணப்படும் 'கணிப்பான்'(Counter) சுமார் இருபதினாயிரம் வாசகர்களைக் குறைவாகக் காட்டுவதற்குக் காரணம் ஒரே வாசகர் இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் திரும்பத் திரும்ப எமது தளத்திற்கு வருகை தந்தால் அவரது வருகையை ஒரு தடவை மட்டும் பதிவு செய்யும். ஆனால் எமது தளத்திற்கு வருகை தரும் வாசகர்களைப் பதிவு செய்யும் நிறுவனங்களாகிய Extreme Tracking.com மற்றும் blogger.com ஆகிய இணையங்கள் எமக்களித்த புள்ளிவிபரமே மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையாகும்.
இணைய உலகில் கால் பதிக்கும் அனைத்துப் புதிய இணையத்தளங்களும் சந்திக்கக் கூடிய சவால்கள் அனைத்தையும் நாமும் எதிர்கொண்டோம். இருப்பினும் எமது பாதையை 'வெற்றிப் பாதை' ஆக்கிய பெருமை எமது அன்பு வாசகர்களாகிய உங்களையே சாரும். அது மட்டுமன்றி 'கூகிள்' இணையத் தளத்தில் அதிக தமிழ் வாசகர்களால் தேடப்படும் முக்கியமான தமிழ் இணையத் தளங்களில் 'அந்திமாலையும்' முன்னணியில் இருப்பதற்குக் காரணம் எமது அன்பு வாசகர்களாகிய நீங்கள்தான் என்பதை இந்த இனிய தருணத்தில் மிகவும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எமது வளர்ச்சிக்குத் துணை நிற்கும் வாசகப் பெருமக்களையும், படைப்பாளிகளையும், விளம்பரதாரர்களையும், சகோதர இணையத் தளங்களையும் இருகரம் கூப்பி வணங்குகிறோம். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை நல்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.
வாருங்கள் "ஒன்றுபட்டு உயர்வோம்"

உளமார்ந்த அன்புடன் 
அந்திமாலையின் சார்பில் 
இ.சொ.லிங்கதாசன் 
-ஆசிரியர்-
அந்திமாலை இணையம் 
www.anthimaalai.dk

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Eniya vaalththukal....
Vetha.Elangathilakam.

கருத்துரையிடுக