செவ்வாய், பிப்ரவரி 01, 2011

நாடுகாண் பயணம் - பஹ்ரெயின்

நாட்டின் பெயர்:
பஹ்ரெயின் (Bahrain)



முழுப்பெயர்:
பஹ்ரெயின் இராச்சியம்


அமைவிடம்:
மத்திய கிழக்கு ஆசியா.


எல்லைகள்:
முப்பதிற்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட நாடு என்பதால் நான்கு பக்கங்களும் பாரசீகக் குடாக்கடல், இருப்பினும் கடலுக்கு அப்பால்
மேற்குப்பக்கம்: சவூதி அரேபியா
தென்கிழக்குப் பக்கம்: கட்டார் 

தலைநகரம்:
மனாமா (Manama)


அலுவலக மொழி:
அரபு மொழி 


ஆட்சி முறை:
மன்னரின் ஆட்சிக்குட்பட்ட நாடு.


மன்னர்:
Hamad ibn Isa Al Khalifa


இளவரசர்:
Salman ibn Hamad ibn Isa Al Khalifa


பிரதமர்:
Khalifa ibn Salman Al Khalifa 


பாரசீகத்திடமிருந்து சுதந்திரம்:
1783


ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை:
15.8.1971


பரப்பளவு:
750 சதுர கிலோ மீற்றர்கள்.


சனத்தொகை:
80, 7000


சமயங்கள்:
இஸ்லாம்: 81,2 %
கிறீஸ்தவம்: 9 %
இந்துக்கள் மற்றும் ஏனையோர்: 9,8 % 


நாணயம்:
பஹ்ரெயின் தினார் (BHD)


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-973


கல்வியறிவு:
86,5 %
விமான நிலையம் 


ஆயுட்காலம்:
ஆண்கள்: 72,8
பெண்கள்: 78


பிரதான வருமானம் தரும் தொழில்கள்:
சுற்றுலாத் துறை(வருடமொன்றிற்கு 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள்),
பெற்றோலியம் ஏற்றுமதி.


ஏற்றுமதிகள்:
பெற்றோலியப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், கோழி இறைச்சி, முட்டை, பால், இறால், மீன். முத்துக்கள்.


தொழிற்சாலைகள்:
பெற்றோலியம், அலுமினியம், இரும்பு, உரம், கப்பல் பழுதுபார்த்தல்.


நாட்டைப் பற்றிய குறிப்புகள்:

  • நாடு மொத்தம் 33 தீவுகளால் ஆனது.
  • நாட்டின் 92 % மான நிலப்பரப்பு பாலைவனமாகவே உள்ளது.
  • நாட்டின் பல பகுதிகள் வரலாற்று முக்கியத்துவமான விடயங்களைக் கொண்டிருப்பதால் ஐ.நாவின் 'unesco' வால் பாதுகாக்கப் படுகிறது.
  • போர்த்துக்கேயர்களால் 80 ஆண்டுகள் ஆளப் பட்டது.
  • 200 வருடங்கள் ஈரான் நாட்டின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
  • 1717, 1738 ஆகிய ஆண்டுகளில் ஓமான் நாடு, பஹ்ரெயின் மீது  படை எடுத்ததால் பஹ்ரெயின்  பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.
  • 1932 ஆம் ஆண்டில் இந்நாட்டில் முதன்முதலில் பெற்றோலியம் கண்டுபிடிக்கப் பட்டது.
  • உலகில் ஐரோப்பிய நாடுகளைப்போல் வேலையில்லாதோருக்கு 'உதவித்தொகை' வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்த முதல் அரபு நாடு இதுவாகும்.
  • இந்நாட்டிலும் டேனிஷ் கட்டிடக் கலைஞர்கள், பொறியியலாளர்களின்  கைவண்ணத்தில் உருவான 50 மாடிகளைக் கொண்ட, 240 மீற்றர்  உயரமான உலக வர்த்தக மையம் எனும் பெயரிலான இரட்டைக் கோபுர அமைப்பிலான மாடிக் கட்டிடம் உள்ளது. 




3 கருத்துகள்:

Kumar Denmark சொன்னது…

நல்லது

Nanthan Swiss சொன்னது…

பயனுள்ளது.

uthayan germany சொன்னது…

i am very very happy to anthimaalai

கருத்துரையிடுக