செவ்வாய், பிப்ரவரி 08, 2011

நாடுகாண் பயணம் - பங்களாதேஷ்

நாட்டின் பெயர்:
பங்களாதேஷ் 


முழுப் பெயர்:
பங்களாதேஷ் மக்கள் குடியரசு 

அமைவிடம்:
தெற்கு ஆசியா 

எல்லைகள்:
மூன்று பக்கமும் - இந்தியா,
தெற்கில் - வங்காள விரிகுடா 
தென்கிழக்கில் - பர்மா 

தலைநகரம்:
டாக்கா (Dhaka)

பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம்:
26.03.1971அரசாங்க முறை:
கூட்டாட்சி மற்றும் பாராளுமன்ற ஜனநாயகம் 

ஜனாதிபதி:
சில்லூர் ரஹ்மான் (Zillur Rahman)

பிரதமர்:
ஷேய்க் ஹசீனா வஷீத் (Sheik Hasina Wazed)
பரப்பளவு:
147,570 சதுர கிலோமீற்றர்கள் 
சனத்தொகை:
164, 400000

மொழி:
வங்காளி (Bangla)
கல்வியறிவு:
47, 9 %
சமயங்கள்:
இஸ்லாம் 89,7 %
இந்துக்கள் 9,2 %
ஏனையோர் 1,1 %

ஆயுட்காலம்:
63 வருடங்கள் 
நாணயம்:
தக்கா (Taka)

சர்வதேசத்  தொலைபேசிக் குறியீடு:
00-880

ஏற்றுமதிப் பொருட்கள்:
அரிசி, தேயிலை, உருளைக் கிழங்கு, மாம்பழம், வெங்காயம், புளி, அன்னாசி, வாழைப்பழம், துணிகள், தைக்கப்பட்ட ஆடைகள்.
பங்களாதேஷின் விமானசேவைக்குரிய விமானம் 

இயற்கை வளங்கள்:
இயற்கை எரிவாயு, நிலக்கரி, மரங்கள்.

நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • உலகில் மிகவும் சனத்தொகை அடர்த்தி கூடிய நாடுகளின் வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளது.
  • உலகில் வறிய நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • ஒவ்வொரு வருடமும் இயற்கை அனர்த்தங்களால்(புயல், வெள்ளப் பெருக்கு) நூற்றுக்கணக்கானவர்கள் இந்நாட்டில் பலியாகின்றனர்.
  • 1971 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது, இந்நாடு உருவாகி நாற்பது வருடங்கள் மட்டுமே ஆகிறது.
  • சுதந்திரப் போரின்மூலமே பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் அடைந்தது.
  • இந்நாட்டின் சுதந்திரப் போருக்கு இந்திய இராணுவம் உதவி வழங்கியது.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக