வெள்ளி, பிப்ரவரி 18, 2011

நெஞ்சங்களை அள்ளிய பாடகி

இன்றைய பாடலின் சிறப்புக்கள் :

  • எண்பதுகளில் இள நெஞ்சங்களைத் தன் குரலால் வசீகரித்த வாணி ஜெயராமின் காலத்தால் அழியாத பாடல்.
  • கவிஞர் வைரமுத்து அவர்களைத் தமிழ் ரசிகர்கள் முன்னிலையில் தூக்கி நிறுத்திய பாடல்.
  • சங்கர் கணேஷ் எனும் இசையமைப்பாளரின் மெய்மறக்க வைக்கும் இசைக்கு ஒரு சான்று.
  • 1981 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் லட்சக்கணக்கான இலங்கை, இந்திய, மலேசிய, சிங்கப்பூர்  நேயர்களால் வானொலிகளில் அதிகமாக விரும்பிக் கேட்கப்பட்ட பாடல்.
  • இப்பாடல் இடம்பெற்ற 'பாலைவனச்சோலை' என்ற திரைப்படத்தின் அமோக வெற்றியின் காரணமாக மீண்டும் 2009 ஆம் ஆண்டில் அதே பெயரில் மறு-தயாரிப்பு(re-make) செய்யப்பட்டு, அதே பாடலும் புதிய திரைப்படத்தில் இடம்பெற்றது.
  • புதிய திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலை இளைய தலைமுறையின் இதயங் கவர்ந்த பாடகி 'சாதனா சர்கம்' அவர்கள் பாடியிருந்தார்.
  • புதிய பாடலுக்கு 'பொப்பி' என்பவர் இசையமைத்திருந்தார்.


பழைய பாடலை இங்கே பார்வையிட்டு + கேட்டு ரசிக்கலாம்.புதிய பாடலை இங்கே பார்வையிட்டு + கேட்டு ரசிக்கலாம்.


இப்பகுதியில் உங்கள் விருப்பப் பாடல்களும் இடம்பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால் பாடல், பாடல் இடம்பெற்ற திரைப்படம், பாடலை நீங்கள் விரும்புவதற்கான காரணம் போன்றவற்றைச் சுருக்கமாக ஆனால் தெளிவாக எழுதி, உங்கள் பெயர், முகவரி போன்ற விபரங்களோடு  anthimaalai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். எமக்கு வந்து சேரும் மின்னஞ்சல்களின் வரிசைக் கிரமத்தின் அடிப்படையில் உங்கள் விருப்பங்கள் வெளியிடப்படும்.
-ஆசிரியர்-
அந்திமாலை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக