வெள்ளி, ஏப்ரல் 12, 2013

தமிழரின் பெருமை - கம்போடியாவில்!

உலகின்பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்குத் தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தை நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம்  உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தலம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயல்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டுமா?, வைணவத் தலமான இந்த கோயில்தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!


இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்று சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!

இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில்... மேலும் 

1 கருத்து:

துளசி கோபால் சொன்னது…

http://thulasidhalam.blogspot.com/2010/08/2.html

http://thulasidhalam.blogspot.com/2010/08/3.html

இன்னும்கொஞ்சம் படங்களும் விவரங்களும் இந்தச்சுட்டிகளில்.

கருத்துரையிடுக