செவ்வாய், நவம்பர் 26, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்அதிகாரம் 93 கள் உண்ணாமை

கைஅறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து 
மெய்அறி யாமை கொளல். (925)

பொருள்: ஒருவன் தனது கையில் உள்ள செல்வத்தைக் கொடுத்து மதுவருந்தி, மயங்கிக் கிடப்பதற்குக் காரணம், செய்வது இன்னது என்று புரியாத அவனது அறியாமையே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக