அந்திமாலையில் வாசகர் வருகை
60,000 தைத் தாண்டியது.
60,000 தைத் தாண்டியது.

எமது அந்திமாலையின் உதயம்பற்றி முறைப்படி மின்னஞ்சல் ஊடாகவும், 'முகப் புத்தகம்' (facebook) ஊடாகவும், ஒரு சில அன்பு உள்ளங்களுக்குக் கடிதமூலமாகவும் அறிவித்தல் கொடுக்க ஆரம்பித்த 20.09.2010 தேதி தொடக்கம் இன்றைய தினம் (19.11.2012) திங்கட்கிழமை முற்பகல் 11.19 மணிவரை 'அந்திமாலை' இணையத்தளத்திற்கு வருகைதந்த வாசகர்களின் மொத்த எண்ணிக்கை 60,000 ஆகியது. இவ்விணையமானது ஒரு ஆத்ம திருப்திக்காகவும், பொழுதுபோக்கிற்காகவுமே எம்மால் ஆரம்பிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் காரணமாகவே நாம் 'தினசரிச் செய்திகளை' வெளியிடுவதில்லை. உலகில் தினசரிச் செய்திகளை வெளியிடுகின்ற சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இணையத் தளங்களும், தமிழ் கூறும் நல்லுலகத்தைச் சேர்ந்த தனி மனிதர்களால், நேரம் கிடைக்கும்போது பதிவேற்றம் செய்யப்படும் எண்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் வலைப் பதிவுகளும் உள்ளன என்பதை உங்களில் சிலரேனும் அறிவீர்கள். மொத்தமாக எண்பத்திரெண்டாயிரத்திற்கு மேற்பட்ட இணையங்களோடு போட்டியிட்டு இணைய உலகில் கால் பதிக்க வேண்டிய ஒரு கடினமான சூழலில் 'அந்திமாலை' பிறப்பெடுத்தது. இருப்பினும் எமது அன்பு வாசகர்களாகிய உங்களது ஆதரவால் இரண்டு வருடங்களைத் தாண்டியும் அந்திமாலை ஒரு இணையமாக உங்கள்முன் பவனி வருகிறது. ஏறத்தாழ இருபத்தியாறு மாத காலத்திற்குள் வாசகர் வருகைப்பதிவேட்டைத் தமது வருகையால் நிரப்பி, வரவு எண்ணிக்கையை அறுபதினாயிரத்திற்கு மேற்பட்டவர்கள்' என்ற சிறப்பான நிலைக்குக் கொண்டுவந்திருக்கும் எமது அன்பு வாசகப் பெருமக்களை 'அந்திமாலை' இருகரம்கூப்பி வணங்குகிறது.

இந்த மனம் மகிழும் இனிய தருணத்தில் எமக்கு ஆக்கங்களையும், ஆலோசனைகளையும் வழங்கிய, வழங்கிவருகின்ற அனைத்து அன்பு உள்ளங்களையும் நன்றியோடு வணங்குகிறோம். அதேபோல் எங்கள் சோர்வை அகற்றி புத்துணர்ச்சியோடு எம்மைச் செயற்படத் தூண்டும் உங்கள் அனைவரது வருகைக்கும் எமது சிரம்தாழ்ந்த நன்றிகள். தொடர்ந்து எமது தளத்திற்கு வருகை தருவதோடு, கருத்துரைகள் இட்டு எம்மையும், எமது படைப்பாளிகளையும் ஊக்குவிக்கின்ற வாசகர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றிகள் உரித்தாகுக. அதேபோல் எம்மை தொடர்ந்தும் உற்சாகப்படுத்திய, ஊக்குவிக்கின்ற அத்தனை நல் இதயங்களுக்கும் எம் நன்றிகள் உரித்தாகுக. என்றும் வேண்டும் இந்த இனிய உறவு.
வாருங்கள்! ஒன்றுபட்டு உயர்வோம்.
நன்றியுணர்வுடன்
அந்திமாலையின் சார்பாக,
இ.சொ. லிங்கதாசன்
www.anthimaalai.dk
2 கருத்துகள்:
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
அரசியல்வாதி கணக்கா மைக் வச்சி நன்றி சொல்லிட்டீங்களே! ஹா ஹா ஹா !!
கருத்துரையிடுக