திங்கள், நவம்பர் 05, 2012

தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றனவா?

நாம் உழைக்கிறோம். பிறகு உழைப்பை நிறுத்தி ஓய்வு எடுக்கிறோம். நம்முடைய ஓய்வில் தூக்கம் ஒரு முக்கியமான பகுதி. ஆனால் தாவரங்களின் நிலை என்ன? அவை உழைக்கின்றனவா? ஓய்வு எடுக்கின்றனவா?

தாவரங்களின் உழைப்பின் பயன்தான் காய்களும், கனிகளும். தாவரங்களின் உழைப்பின் பயனை நாம் அனுபவிக்கிறோம். ஆனால் அவற்றின் உழைப்பைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. தாவரங்களின் உழைப்பைப் பற்றியே நாம் சிந்திக்காத நிலையில், அவை எப்போது ஓய்வெடுக்கின்றன அல்லது தூங்குகின்றன என்று ஏன் யோசிக்கப் போகிறோம்?

தாவரங்கள் மழைக் காலத்தில் ஓய்வு கொள்கின்றன என்று கூறுவது மிகையாகாது. அவை அக்காலத்தில் கும்பகர்ணர்களாகின்றன. தாவரங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அவை உழைத்துக் களைப்படைகின்றனவா? ஆம், அவை நன்றாக உழைத்துள்ளன. எனவே நல்ல ஓய்வுக்கு அவை தகுதி உடையவை. அவற்றின் பல்வேறு உறுப்புகளும் வசந்த காலம், கோடை காலம், இலையுதிர்க் காலம் ஆகிய பருவங்களில் தமக்குரிய பணிகளைச் செம்மையாகச் செய்துள்ளன.

தாவரங்கள் எவ்வாறு உழைக்கின்றன என்று கேட்கலாம். மனிதர்களாகிய நாம்தான் சுவாசிக்கிறோம் என்று எண்ண வேண்டியதில்லை. தாவரங்களும் சுவாசிக்கின்றன. அவற்றுக்கும் உணவு ஊட்டும் உறுப்புகள் உள்ளன. அரும்புகள் தோன்றுகின்றன. அவை மலர்களாகின்றன. காய்கள் தோன்றி, கனிகளாகின்றன. இந்த விந்தை நிகழ்ச்சிகள் யாவும் தாவரங்களின் வெவ்வேறு உறுப்புகளின் இடைவிடாத உழைப்பைத்தான் சுட்டிக் காட்டுகின்றன.

இவ்வளவு சிறப்பாகவும், கடுமையாகவும் உழைத்துள்ள தாவரங்களுக்கு ஓய்வு வேண்டும் அல்லவா? ஆகவே மழைக் காலமே அவற்றின் ஓய்வுக் காலம். நாம் ஓய்வெடுக்கையில் எல்லாப் பணிகளையும் மூட்டை கட்டி வைத்துவிடுவதைப் போல தாவரங்களும் தமது பணிகளை அறவே நிறுத்தி வைத்துவிடுகின்றன.

மழைக் காலம் தொடங்கும்போது சில விலங்குகள் மாண்டுவிடுகின்றன. அவற்றைப் போல இறக்காமல் வளமாக வாழும் பெரும்பாலான தாவரங்கள், குறிப்பாக இலைகளை உதிர்க்கும் தாவரங்கள் இலையுதிர்க் காலத்தில் இருந்தோ அல்லது வசந்த காலத்தில் இருந்தோ ஓய்வெடுக்கின்றன. அந்தக் காலத்தில் அவற்றின் பல்வேறு பாகங்கள் தமது பணிகளை வெகுவாகக் குறைத்துக் கொள்கின்றன.

மழைக் காலத்தில் தாவரங்களின் உயிரணுக்களில் ஈரம் இருப்பதில்லை. ஈரம் உலர்ந்து விடுகிறது. தாவரங்களில் அடங்கியுள்ள மேலும் 

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறிந்து கொண்டேன்... நன்றி...

கருத்துரையிடுக