ஆக்கம்: வேதா இலங்காதிலகம்.
டென்மார்க்.
பிறர்க்கு உதவல்
பிறர்க்கு உதவல் என்பது மனிதனிற்கு
பிறவியிலேயே வரும் குணம்.
பிறவியிலேயே வரும் குணம்.
உதவுகிறவனை நன்றி யுணர்வு இன்றி
உதாசீனம் செய்யுமுலகு இது.
உதாசீனம் செய்யுமுலகு இது.
திமிர், செருக்குடையோன் தான் பெற்ற
உதவியை நிமிர்ந்தும் நினைக்கான்.
உதவியை நிமிர்ந்தும் நினைக்கான்.
உதவுவோன் உள்ளம் திறந்தது. எந்தக்
கதவும் போட்டு மூடாதது.
பயன் கருதாது உதவும் மனமும்
பயணிப்பது மரபணுவோடு எனலாம்.
பயணிப்பது மரபணுவோடு எனலாம்.
உதவி செய்தவனைப் பின்னங்காலால் மறந்தும்
உதைப்பவன் மாக்களுள் ஒருவன்.
உதைப்பவன் மாக்களுள் ஒருவன்.
உதவு! முடிந்தளவு உதவு! சொர்க்கத்தின்
கதவு தானாகத் திறக்கும்.
கதவு தானாகத் திறக்கும்.
மன மகிழ்வோடு உதவு! கனதியற்ற
மனத்திருப்தியும், நிறைவும் பெறலாம்.
மனத்திருப்தியும், நிறைவும் பெறலாம்.
பெற்ற உதவியை நினைத்து நன்றி
பேணுமுணர்வு எல்லோருக்கும் வராது.
பேணுமுணர்வு எல்லோருக்கும் வராது.
6 கருத்துகள்:
Very good. thanks Vetha
Dear Suthan! T.Nathan! Thank you so much for your vatikallukku. God bless you all.
unthaludan vaalththukkal..
mikka nanry sakothara Saravanan. I am very glad to see your wordes .Thank you so much.god bless you.
ஒருவருக்கு மனநிறைவோடு உதவி செய்யும் போது ஏற்படும் மகிழ்ச்சி வேறெதிலும் கிடைத்துவிடாது .உதவுவோம் ஆனால் பிரதிபலனை எதிர்பாராமல் .
All the best, following this article
கருத்துரையிடுக