ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

வியட்நாமில் மதுரை வீரன் - பகுதி 2

ஆக்கம்: ஜோ மில்டன், சிங்கப்பூர்
சென்ற முறை வியட்நாமில் மதுரை வீரன் பதிவு போட்டிருந்த போது, நண்பர் அன்பு அவர்கள் "ஹோசிமின் சிட்டியில் இட்லி, தோசை, வடை கிடைக்குமா? என கேட்டிருந்தார். அதற்கான தேடலில் கடைசியில் இட்லி, தோசை, வடையோடு தமிழர் ஒருவர் நடத்தும் 'ஊர்வசி' என்ற உணவகத்தின் முகவரி கிடைக்க, நேற்று அங்கு சென்றிருந்தேன்.

தொலைக்காட்சியில் ஜெயா டிவி நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டே நம்மூர் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விட்டு, வெளியில் இறங்கி நடந்தால், முந்தைய மாரியம்மன் கோவிலைவிட பெரிய இந்து கோவில் ஒன்று கண்ணில் பட்டது. இம்முறை 'ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில்'.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

மாரியம்மன் கோவில் மாதிரியே இங்கேயும்,உள்ளே நுழைந்ததும் அமுதத் தமிழ் செவியில் நுழைந்தது .'காக்க காக்க ..கனகவேல் காக்க' - என்ற மயக்கும் பாடல், கொஞ்ச நேரம் அப்படியே கேட்டுக்கொண்டு நின்றிருந்தேன். பின்னர் மிதியடிகளை அவிழ்த்து விட்டு பிரகாரம் அருகில் நுழைந்தால், உள்ளிருந்து இந்தியரா, வியட்நாமியரா என்று குழப்பம் தருகிற தோற்றத்தோடு ஒருவர் வெளியே வந்து என்னைக் கண்டு கைகூப்பி வரவேற்றார் .பதில் வணக்கம் தெரிவித்து, அவரிடம் பின்னர் பேசலாம் என்று நோட்டம் விட ஆரம்பித்தேன்.

Image hosted by Photobucket.com

மிகவும் விசாலமான இடவசதி இருந்தது கோவிலில், பிரகாரத்தை சுற்றி நிறைய சாமிப் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. 'காக்க காக்க " பாடலை கேட்டுக்கொண்டே ஒரு முறை சுற்றி வந்தது இனிமையாக இருந்தது. மதிய நேரம் என்பதால் எண்ணைய், பூக்கள் விற்றுக்கொண்டிருந்த இரு வியட்நாம் பெண்கள் தவிர யாருமில்லை. முதலில் பார்த்த நபரை பேசலாமே என்று தேடினால், ஆளை காணவில்லை .

Image hosted by Photobucket.com

சரி கிளம்பலாம் என்று நினைக்கும் போது கோவிலின் உள்ளே சுவர்களில் மாட்டப்பட்டிருந்த சில இந்திய தலைவர்கள், அறிஞர்களின் பெரிய படங்கள் கவனத்தை ஈர்த்தன. அதில் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் தந்தது, இளம் விவேகானந்தருக்கு அருகில் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் படம்.

Image hosted by Photobucket.com

ஒரு இந்துக் கோவிலுக்குள், ஒரு இஸ்லாமியரின் படத்தைக் கண்டு, ஒரு கிறிஸ்தவன் மகிழ்வது தான் நமது தனிச்சிறப்போ?


(தொடரும்)

7 கருத்துகள்:

Sakthy, DK சொன்னது…

நிறைய எதிர்பார்த்தோம், ஏமாற்றி விட்டீர்கள். இருப்பினும் நீங்கள் தந்த தகவல்களுக்கு நன்றி.

Arul, DK சொன்னது…

கட்டுரை சிறியதாக இருந்தாலும்கூட எமக்குத் தெரியாத பல தகவல்களைத் தந்தீர்கள்.பாராட்டுக்கள்.

Karthika, Switzerland சொன்னது…

Well done Joe.. Your article is so good.

T.Nathan, Denmark சொன்னது…

மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

V.Janani, Germany சொன்னது…

Looking forward...

vinothiny pathmanathan dk சொன்னது…

good

kumar சொன்னது…

G0od keep it. thanks

கருத்துரையிடுக