செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

நாடுகாண் பயணம் - கொமரோஸ்

நாட்டின் பெயர்:
கொமரோஸ் (Comoros)

வேறு பெயர்கள்:
கொமரோஸ் தீவுகள் அல்லது கொமரோஸ் ஒன்றியம் (Comoros Islands / Union of the Comoros)

அமைவிடம்:
இந்து சமுத்திரத்தில் கிழக்கு ஆபிரிக்காவுக்கும் மடகஸ்காருக்கும் இடையில்.

எல்லைகள்:
தீவுகள் என்பதால் நான்கு பக்கமும் இந்து சமுத்திரம்/மொசாம்பிக் கால்வாய் 

அண்டை நாடுகள்:
மொசாம்பிக், மடகஸ்கார், சீஷெல்ஸ் தீவுகள், தன்சானியா.

தலைநகரம்:
மொரொனி (Moroni)


அலுவலக மொழிகள்:
கொமரியன், அரபி, பிரெஞ்சு.

ஏனைய மொழிகள்:
சிக்கமொரோ(அராபிய மொழியும் ஸ்வாகிலி மொழியும் கலந்த மொழி)


இனங்கள்:
அன்டாலோடே (Antalote), கப்ரே (Cafre), மகோஆ (Makoa), ஒய்மட்சஹா (Oimatsaha), சகலவா (Sakalava)

சமயங்கள்:
முஸ்லீம்கள் (சுன்னி) 98%
ரோமன் கத்தோலிக்கர் 2% 


கல்வியறிவு:
56.5%

ஆயுட்காலம்:
ஆண்கள் 61.7 வருடங்கள்
பெண்கள் 66.7 வருடங்கள் 

அரசாங்க முறை:
கூட்டாட்சிக் குடியரசு 

ஜனாதிபதி:
இக்கிலிலோ டொய்னினே (Ikililou Dhoinine) *இது 09.08.2011 அன்று உள்ள நிலவரமாகும்.


பிரான்ஸ் நாட்டிடமிருந்து விடுதலை:
06.07.1975

பரப்பளவு:
2,235 சதுர கிலோமீட்டர்கள்.

சனத்தொகை:
798,000 (2010 மதிப்பீடு)

நாணயம்:
கொமரியன் பிராங் (Comorian Franc / KMF)

இணையத் தளக் குறியீடு:
.km

சர்வதேசத் தொலைபேசி குறியீடு:
00 + 269


விவசாய உற்பத்திகள்:
மிளகு, லாங்-லாங் பூக்கள் (Ylang-Ylang எனப்படும் 'வாசனைத் திரவியங்கள்' தயாரிக்கப் பயன்படும் ஒரு விதப் பூ), வனிலா, கொப்பாரா(கொப்பரை), தேங்காய், வாழைப்பழம், மரவள்ளிக் கிழங்கு.

தொழிற்துறைகள்:
மீன்பிடி, வேட்டையாடுதல், காட்டு வளங்கள்(மூலிகை) ஏற்றுமதி, சுற்றுலாத்துறை, வாசனைத் திரவியங்கள் தயாரித்தல்.

இயற்கை வளங்கள்:
வனிலா, மிளகு, தேங்காய், வாசனைப் பூக்கள்(Ylang-Ylang)

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Thanks for infomation. vaalthukal.

கருத்துரையிடுக