வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

வியட்நாமில் மதுரை வீரன் - பகுதி 1

ஆக்கம்: ஜோ மில்டன், சிங்கப்பூர்
என்னடா இவன் ஊர் ஊரா போறானேண்ணு பாக்குறீங்களா? என்ன செய்யுறது நமக்கு அமைந்த வேலை அப்படி. இதோ இந்த நட்சத்திர வாரத்துலயும் வியட்நாமில இருக்க வேண்டிய சூழ்நிலை. அதுக்காக வியட்நாமில் மதுரை வீரன் -னா நான் மதுரை வீரன் இல்லீங்க. வெறும் உலகம் சுற்றும் வாலிபன் தான்.(தருமி தான் சொன்னாரு..ஹி..ஹி)

ஹோ சி மின் சிட்டி-ல நிஜமாவே நான் தங்கியிருக்கிற இடத்துக்கு பக்கத்துல மதுரை வீரன் இருக்காரு. அதாங்க ஒரு மாரியம்மன் கோவில், அதுல மதுரை வீரனுக்கு ஒரு பிரகாரம்(சரி தானே?). மெதுவான சத்தத்துல தமிழ் பாட்டு பாடிட்டிருக்கு.

Image hosted by Photobucket.com

இதுல என்னங்க விசேஷம் அப்படீன்னு கேக்குறீங்களா? பொதுவா வெளிநாடுகள்ல இருக்கிற இந்தியர்களின் வசதிக்கு தான் கோவில்கள் இருக்கும் .மற்றவர்கள் வேடிக்கை பார்க்கத்தான் வருவார்கள். ஆனா இங்க கும்பிட வர்றவங்க கிட்டதட்ட எல்லோருமே வியட்நாமியர்கள் தாம். ஆனா இங்க இங்குள்ள வியட்நாம் மக்கள் இந்துக்கள் இல்லைன்னாலும் பய பக்தியா வந்து சாமி கும்பிடுறாங்க. அதுவும் கொத்தா சாம்பிராணி திரிகளை கையில வச்சுகிட்டு சீன கோவில்கள்ல தலைக்கு மேல தூக்கி கும்பிடுவாங்களே அது போல இங்க மாரியம்மனுக்கும், மதுரை வீரனுக்கும்
கும்பிடு.

Image hosted by Photobucket.com

உள்ளால ஒரு தமிழர் (பூர்வீகம் மதுரையாம்) சாமி பக்கத்துல நின்னுட்டிருக்காரு. மக்களுக்கு பிரசாதம் குடுக்குறாரு. அவர் கிட்ட பேச்சு குடுத்தா அவருக்கு தமிழ் அவ்வளவா தெரியாதாம். பிறந்ததிலிருந்தே இங்க தான் இருக்காராம். வியட்நாம் போருக்கு முன்னால இங்க நிறைய
இந்தியர்கள் இருந்தாங்களாம். போர் நடக்கும் போது கிட்ட தட்ட எல்லோரும் ஊருக்கு போயிட்டாங்களாம். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு தான் இப்போ இந்தியர்கள் இருக்காங்களாம்.

Image hosted by Photobucket.com

வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஆச்சுண்ணா டிராபிக் ஜாம் ஆகுற மாதிரி கூட்டம் .எல்லாம் லோக்கல் மக்கள் தான்.பாதி பேருக்கு இது இந்து கோவில்-னே தெரியல்ல. கேட்டா 'கம்போடியா கோவில்'-ன்னு சொல்லுறாங்க.அடப் பாவிகளா!


(கைத்தொலைபேசியில அவசரமா எடுத்ததால போட்டோ தரமானதாக இல்லை. பொறுத்துக்குங்க மக்களே!)(தொடரும்)

3 கருத்துகள்:

vinothiny pathmanathan dk சொன்னது…

நல்ல தகவல். தொடர்ந்தும் மதுரை வீரன் தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். நீங்க ரொம்ப லக்கி என்று நினைக்கிறேன். இப்படி ஒரு வாய்ப்பு எல்லோருக்கும் வாய்த்துவிடாது . enjoy பண்ணுங்க.

T.Nathan, Denmark சொன்னது…

உங்கள் கட்டுரை மிகவும் அருமை.

vetha. சொன்னது…

கட்டுரை சுவையாக உள்ளது தொடருங்கள்! வாழ்த்துகள்!
வேதா. இலங்காதிலகம்.

கருத்துரையிடுக