செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

நாடுகாண் பயணம் - கொங்கோ ஜனநாயகக் குடியரசு


வாசகர்களின் கவனத்திற்கு: உலகில் 'கொங்கோ குடியரசு', 'கொங்கோ ஜனநாயகக் குடியரசு' என இரு வேறுபட்ட இறைமையுள்ள நாடுகள் ஆபிரிக்கக் கண்டத்தில்  இருப்பதால் கடந்த வாரம் 'நாடுகாண் பயணத்தில்' கொங்கோ  குடியரசு' இடம்பெற்றது. இவ்வாரம் 'கொங்கோ ஜனநாயகக் குடியரசு' இடம்பெறுகிறது. திரும்பத் திரும்ப ஒரே நாடு இடம்பெறுகிறது என யாரும் குழப்பமடைய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
-ஆசிரியர்-

நாட்டின் பெயர்:
கொங்கோ ஜனநாயகக் குடியரசு (Democratic Republic of the Congo)

வேறு பெயர்கள்:
DR கொங்கோ மற்றும் DRC (இவைகள் கொங்கோ ஜனநாயகக் குடியரசு என்பதன் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும்)
அல்லது RDC(இது கொங்கோ ஜனநாயகக் குடியரசு என்பதன் பிரெஞ்சுப் பெயராகிய Republique Democratique du Congo என்பதன் சுருக்கமாகும்)
அல்லது கொங்கோ கின்ஷாசா(Congo - Kinshasa இது இந்நாட்டின் தலைநகரம் கின்ஷாசா என்பதாலும், அண்டைநாட்டின் பெயரும் 'கொங்கோ' என்பதாலும் குழப்பத்தைத் தவிர்க்கும் முகமாக இவ்வாறு அழைக்கப் படுகிறது.


எல்லைகள்:
வடக்கு - மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் தெற்கு சூடான்.
மேற்கு - கொங்கோ குடியரசு மற்றும் அந்திலாந்திக் சமுத்திரம்.(இந்நாடு நான்கு பக்கமும் நிலப் பரப்பால் சூழப்பட்ட மத்திய ஆபிரிக்காவில் அமைந்திருந்தாலும்,சுமார் 9 கிலோ மீட்டர்கள் அகலம் கொண்ட மிகச்சிறிய நிலப் பரப்பு அத்திலாந்திக் கடற்கரையை தொட்டு நிற்கிறது / அண்மித்ததாக உள்ளது.)
கிழக்கு:உகண்டா, ருவாண்டா, புருண்டி.
தெற்கு: ஸம்பியா, அங்கோலா.

தலைநகரம்:
கின்ஷாசா (Kinshasa)

அலுவலக மொழி:
பிரெஞ்சு 

அங்கீகரிக்கப்பட்ட ஏனைய மொழிகள்:
லிங்கலா (Lingala), கிகொங்கோ(Kikongo), ஸ்வஹிலி(Swahili), சிலுபா(Tshiluba). 

ஆட்சிமுறை:
இலங்கை போன்ற நாடுகளைப் போல் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவருக்குமே அதிகாரங்கள் உள்ள ஜனாதிபதி ஆட்சிக் குடியரசு.

ஜனாதிபதி:
ஜோசப் கபிலா (Joseph Kabila) *இது 23.08.2011 அன்று உள்ள நிலவரமாகும்.

பிரதமர்:
அடொல்ப் முசிட்டோ (Adolph Muzito) *இது 23.08.2011 அன்று உள்ள நிலவரமாகும்.

பெல்ஜியம் நாட்டிடமிருந்து விடுதலை:
30.06.1960


பரப்பளவு:
2,345,409 சதுர கிலோ மீட்டர்கள்.(உலகில் 11 ஆவது பெரிய நாடு)

சனத்தொகை:
71,712,867 (2011 மதிப்பீடு) *சனத்தொகை அடிப்படையில் உலகில் 19 ஆவது பெரிய நாடு.

நாணயம்:
கொங்கோலியன் பிராங் (Congolese franc / CDF)

இணையத் தளக் குறியீடு:
.cd

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00+243

4 கருத்துகள்:

Kumar சொன்னது…

Thanks anthimaalai

பெயரில்லா சொன்னது…

vaalthukal.Nanry.

T.Nathan, Denmark சொன்னது…

I like "NaaduKan Payanam".

vinothiny pathmanathan dk சொன்னது…

nalla thakavalkal .

கருத்துரையிடுக