புதன், ஆகஸ்ட் 03, 2011

சிரிக்க + சிந்திக்க

ஆக்கம்: மனுவேல் மகன்,  பிரான்ஸ் 
களவாடப் பட்ட சூலங்கள்.

எனது அப்பாவுக்கு ஒரு கோயில் இருந்தது. அதில் 'வைரவர்' வாழ்ந்திருந்தார். ஊர்ச் சந்தியில் நின்ற பூவரசில் அநாதரவாய் சாத்தியிருந்த 'சூலம்' ஒன்றையே, அவர் பூவரச மரத்துடன் சேர்த்துக் கோயில் ஆக்கியிருந்தார். அவர் ஒரு நாய் வளர்த்தார். அதன் துணையுடன் அதிகாலையிலேயே எழுந்து பூப்பறித்து, பூசை செய்து, விளக்கு வைத்து வந்தார். 
இது பிடிக்காத சிலர் ஊரில் இருந்தனர். மெல்ல நடுச்சாமத்தில் சூலத்தைக் களவாடிப் போயினர். அதிகாலையில் அப்பா அதிர்ச்சியடைந்தாலும், 'காட்டு வைரவர்' காப்பாற்றினார். வஸ் நிறுத்தம் கோயில் அடியில் இருந்தது. 'முதல் வஸ்' வர முதலே காட்டு வைரவர் 'சந்தி வைரவர்' ஆகியிருந்தார். அப்பா 'ஐயம்பிள்ளை ஆசாரிமூலம்' பழைய சூலம் போன்றதொரு சூலம் செய்து, அன்றிரவே காட்டு வைரவரை அவர் 'வீட்டுக்கு' அனுப்பி வைத்தார். 
அதன் பின் அப்பா இரவு பகலாய் வைரவர் மேல் ஒரு கண் வைத்திருந்தார். வைரவர் காணாமல் போவதும் "நடுச்சந்தியில் தன் வேட்டி அவிழ்ந்து விழுவதும் ஒன்று" என்றே எண்ணினார். திடீர் திடீர் என இரவில் எழுந்து வைரவரைப் பார்க்க ஓடுவார். சாமம் சாமமாய்த் திரிவதால் முதலில் குலைத்த ஊர் நாய்கள், அப்பாவுக்குப் பழக்கமாகிவிடடன. 'சண்டியன் நாய்கள்' கூட அப்பாவிடம் 'பம்முவதைப்' பார்த்து ஊரார், அப்பாவிடம் "வைரவர் வாலாயம்" இருப்பதாகவும், அதனாலேயே வைரவரின் வாகனமான 'நாய்கள்' அப்பாவிடம் அடங்குவதாகவும் முழுமையாய் நம்பினர். 
ஆனால் எதிரிகள் பலசாலிகள் அப்பாவின் பலவீனம் அறிந்தார்கள். அப்பா நாள் தவறாமல் 'கள்ளடிப்பதும்', கள்ளடித்ததும் "ரோஜா மலரே ராஜகுமாரி" என உசத்த குரலில் பாடிக்கொண்டு வருவதும், தவறணை தெற்கிலும் கோயில் வடக்கிலுமாய் இருப்பதும் அவர்களுக்கு உதவியாயிற்று. அப்பா தவறணையில் நிற்க, இரண்டாவது சூலம் களவாடப் பட்டது. கண்டதும், அப்பாவுக்கு அடித்த 'கள்' தானாய் இறங்கிவிட்டது. 
பனை தறிக்க வந்த ஒரு 'வெளியூர் குழு' காட்டுக்குள் தங்கி இருந்ததால், 'காட்டு வைரவரும்' இந்த முறை கை விட்டிட்டார். ஆனால் 'செட்டிகாடு வைரவர்' கை கொடுத்தார். கள்ளை விடேலாமலும், கள்ளற்ற தொல்லை தாங்கேலாமலும், கஸ்ரப்பட்ட அப்பா, ஒரேயடியாய் 'ஐந்து சூலங்கள்' செய்து வந்தார். 
"உழைப்புக்காவேண்டி ஆசாரியின் விளையாட்டுத்தானோ"? என அம்மா குடுத்த உதவாத துப்புக்கு, 'வெத்திலைத்தட்டம்' பதில் சொல்லியது. பெரிய 'அடிப்பனக் கொட்டு' ஒன்றில் சூலம் பொருத்தப்பட்டு, இலகுவாய்ப் பிடுங்க முடியாதவாறு நடப்பட்டது. ஆனாலும் புடுங்கப் பட்டது. அப்பாவின் காவல் பலப்பட்டது. "இதுக்கு வேறமருந்து இருக்கு பொறுத்திருந்து பார்" என அம்மாவிடம் சவால் விட்டிட்டு, சோறு தண்ணி இல்லாமல் கோயிலே கதியாய்க் கிடந்தார். 
கடைசிச் சூலம் நடும்போது அம்மா நக்கலாய்ச் சிரித்தார். "இதுதான் கடைசிச் சூலம் இனி ஒருத்தரும் புடுங்கேலாதென்று" அப்பா இரட்டை அர்த்த வசனம் பேசினார், ஆனால் உறுதியாய்ப் பேசினார். கடைசிச் சூலம் திருடப் படவில்லை. அப்பாவின் காவல் நடவடிக்கைகளும் குறைந்து, நடுச்சாமம் வரை தவறணையில் 'பாட்டுச்சமா' நடந்தது. சில நாள் கழித்து, கோயிலில் இரண்டு சூலம் இருந்தது. இன்னும் சில நாட்களில் துலைந்த அத்தனை சூலங்களும் திரும்பியிருந்தன . களவாடப் பட்ட 'கொட்டுப் பனையும்' மாலை போட்டு, சூடமேற்றி  கோவிலின் முன் காணப் பட்டது. புதிசுபுதிசாய் சூலம் வருவதன் 'மர்மம்' தெரியாத ஊரார், வைரவரின் 'அருளில்' அக்கறை கொண்டனர். வைரவர் கொண்டாடப் பட்டார் .பொங்கல் வைத்த மக்கள், அப்பாவுக்கு வெத்திலை பாக்குடன் இரண்டு 'கள்ளுக்களவான காசும்', எங்களுக்கு ஏழெட்டுத் 'தழிசைபொங்கலும்' கொடுத்து "மரியாதை" செய்தனர். இதன் பின் வெறி ஏறினால் அப்பா, "அடி உதவிற மாதிரி அண்ணன் தம்பி உதவாங்கள்" என்று பழமொழி சொல்லித் திரிந்தார்.

சந்தியில் வசிக்கும் என் ஆருயிர் நண்பன் , தான் விடிய வெள்ளன 'கள்ளப் பனங்காய்' பொறுக்க போகேக்க, எங்களூர் 'தெருச்சண்டியர்' தவழ்ந்து வந்து ஒரு சூலத்தை நட்டுச்சென்றதை, "தன் இரு கண்களாலும் கண்டதாய்" வைரவர்மேல் சத்தியம் பண்ணினான்.
நன்றி: manuvelmahan.blogspot.com       

11 கருத்துகள்:

Ramesh, DK சொன்னது…

Good story

kowsy சொன்னது…

இது உண்மைக்கதையா? கற்பனையா?

manuvel mahan சொன்னது…

ஆசிரியருக்கு முதற்கண் என் நன்றிகளும் வணக்கங்களும்.
புதிதாக அடியெடுத்து வைக்கும் குழந்தையை
நாம் கை தட்டி ஊக்கப் படுத்துவது போல,
என் ஆக்கத்தை பாராட்டி வரவேற்று இருந்தீர்கள்.
பரணில் கிடக்கும் தள்ளுவண்டியை தேடி எடுத்து,
அந்தப் பிள்ளை நடைபழக கொடுத்துதவுவது போல
அந்திமாலையில் இடமளித்து எனக்கு ஊக்கம் அளித்துள்ளீர்கள்.
நன்றிகள் பல.
உங்களின் விமர்சனத்தையும் ஆலோசனைகளையும் ஆசான் முன் மாணவனாய் எதிர்பார்த்திருக்கிறேன்....

manuvel mahan சொன்னது…

to santhiragowrikku- fifty,fiftyu

Anu, USA சொன்னது…

Very good...

Ramesh, DK சொன்னது…

அருமையாக உள்ளது. இன்னும் இப்படியான நகைச்சுவை கலந்த கதைகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

vinothiny pathmanathan dk சொன்னது…

உங்கள் நகைச்சுவை கலந்த படைப்பு பிரமாதமாக இருந்தது. எந்த ஒரு விடயமும் நகைச்சுவை கலந்து சொல்லப்படும்போது வாசகர்களின் மனதை அதிகம் கவரும் . அந்த வகையில் தொடர்ந்தும் உங்கள் நகைச்சுவை கலந்த படைப்புக்களை எதிபார்க்கின்றோம். பாராட்டுக்கள் .

seelan சொன்னது…

super

Sakthy, DK சொன்னது…

Very good story with humor. Keep it up

Raja and Mala சொன்னது…

உண்மையாகவே சிரிப்பை வரவழைத்தது உங்கள் கதை. பராட்டுக்கள்.

Arul, DK சொன்னது…

Very good funny story

கருத்துரையிடுக