வெள்ளி, டிசம்பர் 16, 2011

கிரீன் டீயின் ரகசியம்

ஆக்கம்:  வினோ ரூபி, சென்னை இந்தியா 
கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.

பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.

சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.

எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கிரீன் டீயின் நன்மைகள்

1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

5. இதய நோய் வராமல் தடுக்கிறது.

6. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

9. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

13. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

14. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

15. பருக்கள் வராமல் தடுக்கிறது.

15. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

16. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.

17. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.

4 கருத்துகள்:

Vetha. Elangathilakam. சொன்னது…

very worthe infomation. Thank you.

ADAM சொன்னது…

green tea ? what?

ஆசிரியர், அந்திமாலை. சொன்னது…

அன்பார்ந்த ADAM அவர்கட்கு,
'கிரீன் டீ' என்பது தமிழில் மொழி பெயர்க்கும்போது 'பசுந் தேநீர்' என்று அர்த்தம் கொள்ளப் படுகிறது.தேயிலைச் செடியின் பசுமையான(பச்சை) இலைகளை வெயிலில் உலர்த்தி அதை இயந்திரங்களில் வறுத்து அரைக்கப் படுவதே சாதாரண தேயிலை ஆகும். ஆனால் கிரீன் டீ யானது வெறுமனே வெயிலில் உலர்த்தப் பட்டு அரைக்கப் படுவதாகும். இதன் மூலம் அதிலுள்ள மிகவும் முக்கியமான சத்துக்கள் மனித உடலுக்குக் கிடைப்பதுடன் சாதாரண டீயிலிருந்து கிடைக்கும் பலன்களை விடவும் அதிக மருத்துவப் பயன்கள் கிரீன் டீயில் கிடைக்கின்றன. கிரீன் டீ வறுக்கப் படுவதில்லை என்பதால் மின்சாரம் மிச்சப் படுத்தப் படுகிறது. பூமித் தாய்க்கு உதவ முடிகிறது. காபனீரொட்சைட்டு(கரி அமில வாயு) பூமியில் அதிக அளவில் வெளியேறுவது தடுக்கப் படுகிறது.நாம் கிரீன் டீயை பருகுவதன் மூலம் நமது உடலுக்கு அதிக நன்மைகள் ஏற்படுவதுடன், புவி வெப்பமடைதலை நம்மால் குறைக்க முடிகிறது. கிரீன் டீ மனிதனுக்கு ஏற்படும் இருதய நோய்கள், புற்று நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுப்பதாக ஒரு சாரார் நம்புகின்றனர்.இருப்பினும் இது ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப் பட்டதாக தகவல் இல்லை. கிரீன் டீ பற்றிய மேலதிக தகவல்களை அறிவதற்கு கட்டற்ற கலைக் களஞ்சியமாகிய 'விக்கிப் பீடியாவில்' Green tea என்று எழுதித் தேடுங்கள். அவர்களது இணையப் பக்கத்தின் இடது பக்கத்தில் தமிழிலும் வாசிக்கும் வசதி உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள் என்பது எமது நம்பிக்கை.
ஐரோப்பியக் கடைகளில் கிரீன் டீ சுலபமாக கிடைக்கிறது.நீங்கள் தமிழ்நாட்டில் வாழ்பவராக இருப்பின் பலரிடமும் விசாரியுங்கள், எங்காவது கண்டு பிடிப்பீர்கள்.

vinothiny pathmanathan dk சொன்னது…

thank you vino

கருத்துரையிடுக