வெள்ளி, டிசம்பர் 23, 2011

மனுகுல மீட்புக்காய்….

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்பெத்தலகேம் நகரில் ஒரு மீட்பர்
இத்தரையில் உதிப்பார் என்று பல
உத்தம அறிகுறிகள் அன்று தோன்றியதாம்.
அத்தியாயத்தின் கதவு அமைதியாய்த் திறந்தது.
நாட்டு வழிப் பாதையில் சூசை
காட்டிய வழியில் கர்ப்பிணி மரியாள்
கட்டி முத்தான யேசுபாலன் உதிக்க
எட்டிய அடிதளர எழுந்தது பிரசவவலி.
திருவான தேவ கருணை இரட்சகர்
அருமை மாளிகை அந்தப்புரம் போல
ஒரு மகிமையான மாட்டுத் தொழுவத்தில்
கருவறை விட்டு பூமியில் உதித்தார்!
காரிருள் குளிர் போர்வை விரிக்க
அரிய மனுகுல மீட்பர்  பிறந்ததாய்
ஊர்த்துன்ப மேகம் கலைந்து மக்கள்
வாரி அள்ளும் துன்பமும் கரையட்டும்.
யேசுபாலன் உதயம் போல தமிழருக்கு
தேசு மிகு உதயம் பிறக்கட்டும்!
வாசமுடன் தமிழர் தமிழ் மொழியென
தேசமெலாம் பெயரேற வாழ்வுயரட்டும்!
பாலன் பிறந்தார் மனுகுல மீட்புக்காய்!
காலம் பிறக்கட்டும் இலங்கையர் அமைதிக்காய்!
பாலம் அமையட்டும் நாட்டு ஒற்றுமைக்காய்!
நாலும்  சிறந்து நாடு சிறக்கட்டும்!

அனைத்து அன்புள்ளங்களிற்கும் இனிய 

கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துள்.

4 கருத்துகள்:

Sakthy, DK சொன்னது…

So good.. And Merry christmas to you, Vetha

Amutha, France சொன்னது…

Romba nalla irukku.. ungkalukkum Merry X-mas

வேணுகோபால், தஞ்சாவூர் சொன்னது…

உங்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள், எழுத்தாளர் வேதா.

பெயரில்லா சொன்னது…

Sakthy,DK- Amutha,France-
Venugopal, Thanchvur..
மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் உங்கள் கருத்திடலிற்கு. இனிய வாழ்த்துகள். இறை அருள் கிட்டட்டும்.

கருத்துரையிடுக