செவ்வாய், டிசம்பர் 06, 2011

நாடுகாண் பயணம் - துபாய்

நாட்டின் பெயர்:
துபாய்(Dubai)
'துபை' எனவும் 'டுபாய்' எனவும் அழைக்கப்படும் இச் சிற்றரசு ஐக்கிய அரபுக் குடியரசில் உள்ள ஒரு சிறிய அரசு ஆகும். மொத்தம் ஏழு சிற்றரசுகள் சேர்ந்து ஒரு பெரிய அரசை அமைத்துள்ளன.ஒவ்வொரு சிற்றரசுக்கும் ஒரு மன்னர்(அமீர் அல்லது சுல்தான்) இருப்பார். இவர்கள் அனைவரும் தமது இறைமைக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் ஒரு கூட்டரசை அமைத்துள்ளனர். அக் கூட்டரசின் பெயர் 'ஐக்கிய அரபுக் குடியரசு' ஆகும். அமீர் அல்லது எமீர் என்றால் அராபிய மொழியில் 'மன்னன்' என்று அர்த்தம். இக்குறுநில மன்னர்கள் ஆளும் பகுதி அமீரகம் /எமிரேட் என்று அழைக்கப் படுவதன் அர்த்தம் தற்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். 


வேறு பெயர்கள்:
துபாய் சிற்றரசு அல்லது அமீரகத்தின் துபாய் (Emirate of Dubai)


அமைவிடம்:
தெற்குப் பாரசீக வளைகுடா 


எல்லைகள்:
தெற்கு - அபுதாபி சிற்றரசு 
வட கிழக்கு - சார்ஜா சிற்றரசு 
தென்கிழக்கு - ஓமான் நாடு  
வடக்கு - அஜ்மான், ரஸ் அல் கைமா சிற்றரசுகள் 
மேற்கு - பாரசீக வளைகுடா 


கூட்டிணைவு அரசின் பெயர்:
ஐக்கிய அரபுக் குடியரசு(United Arab Emirates / UAE)


கூட்டிணைவில் இணைந்த தேதி:
9.06.1833 


ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை:
02.12.1971


ஆட்சிமுறை:
அரசியலமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மன்னராட்சி 


ஆட்சியாளர்:
முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் (Muhammed bin Rashid Al Maktoum)


முடிக்குரிய இளவரசர்:
ஹமடான் பின் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் (Hamadan bin Muhammed bin Rashid Al Maktoum)


சமயங்கள்:
இஸ்லாம் 76% 
கிறீஸ்தவர் 9%
இந்துக்கள் 15%
*இங்கு குறிப்பிடப் படுவது மொத்த ஐ.அ.குடியரசின் மக்களின் சமய வீதம் ஆகும்.மொத்தக் குடியரசிலும் ஏனைய மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். மேற்படி குடியரசு மத சகிப்புத் தன்மையுள்ள அரசு எனினும் பிற மதங்களைப் பரப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது. மொத்தக் குடியரசிலும் முப்பதுக்கு மேற்பட்ட கிறீஸ்தவ தேவாலயங்களும், துபாயில் ஒரு இந்துக் கோவிலும் உள்ளமை குறிப்பிடத் தக்கது.

மொழிகள்:
அரபு மொழி, பாரசீக மொழி, ஆங்கிலம், ஹிந்தி, உருது. 


கல்வியறிவு:
91%


ஆயுட்காலம்:
ஆண்கள் 73 வருடங்கள் 
பெண்கள் 79 வருடங்கள் 
*இங்கு குறிப்பிடப் படுவது மொத்த ஐ.அ.குடியரசின் மக்களின் ஆயுட்காலம் ஆகும்.


வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வோர்:
19.5%(முழு ஐ.அ.குடியரசின் மதிப்பீடு)


சிற்றரசின் பரப்பளவு: 
4,114 சதுர கிலோ மீட்டர்கள் 
*இவ்விடத்தில் சிற்றரசு எனக் குறிப்பிடப் படுவது 'துபாய் சிற்றரசு' மட்டுமே ஆகும். மொத்த ஐக்கிய அரபுக் குடியரசு அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.


சிற்றரசின் சனத்தொகை:
2,262,000(2010 மதிப்பீடு)
*இவ்விடத்தில் சிற்றரசு எனக் குறிப்பிடப் படுவது 'துபாய் சிற்றரசு' மட்டுமே ஆகும். மொத்த ஐக்கிய அரபுக் குடியரசு அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.


இனங்கள்:
எமிரேட்டிகள்(அமீர்கள்) 17%
ஏனைய அரபு இனங்கள் 9%
இந்தியர்கள் 42.3%
பாகிஸ்தானியர்கள் 13.3%
பங்களா தேஷ் நாட்டவர் 7.5%
பிலிப்பீனோக்கள் 2.5%
இலங்கையர் 1.5%
ஐரோப்பியர் 0.9%
அமெரிக்கர்கள் 0.3%
ஏனைய நாட்டவர் 5.7%
(2005 மதிப்பீடு)
*மேற்படி மதிப்பீட்டின்படி நாட்டின் பூர்வீகக் குடிகளாகிய அமீர்கள் சிறுபான்மை இனமாகவும், வந்தேறு குடிகளாகிய இந்தியர்கள் பெரும்பான்மை இனமாகவும் இருப்பதைக் காண்க.


நாணயம்:
திர்ஹம் (UAE Dirham / AED)
*இந் நாட்டு நாணயத்தை பேச்சுத் தமிழில் 'திராம்' என்றும் 'டிராம்' என்றும் உச்சரிக்கும் தமிழ் மக்களும் உள்ளனர். மேற்படி நாணயம் 'துபாய்' மட்டுமன்றி ஏனைய ஆறு சிற்றரசுகளுக்கும் பொதுவானது.


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 971
*துபாய் மட்டுமன்றி ஐக்கிய அரபுக் குடியரசு முழுவதற்கும் மேற்படி தொலைபேசிக் குறியீடு பொருந்தும் என்பதை நினைவில் கொள்க.


இணையத் தளக் குறியீடு:
.ae 
*துபாய் மட்டுமன்றி ஐக்கிய அரபுக் குடியரசு முழுவதற்கும் மேற்படி இணையத் தளக் குறியீடு பொருந்தும் என்பதை நினைவில் கொள்க.


விவசாய உற்பத்திகள்:
பேரீச்சம்பழம், காய்கறிகள், வத்தகைப் பழம்(தர்ப்பூசணி/watermelon), கோழி  இறைச்சி, முட்டை, மீன், பால் உற்பத்திப் பொருட்கள்.


ருமானம் தரும் தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள்:
பெட்ரோலியம், பெட்ரோலிய இரசாயனப் பொருட்கள், மீன்படி, அலுமினியம், சீமெந்து, உரங்கள், வர்த்தகக் கப்பல்கள் பழுது பார்த்தல், கட்டிடப் பொருட்கள் உற்பத்தி, படகு தயாரிப்பு, கைவினைப் பொருட்கள், துணி வகைகள்.


ஏற்றுமதிகள்:
கச்சா எண்ணெய்(மசகு எண்ணெய் / சுத்திகரிக்கப் படாத பெட்ரோலியம்), இயற்கை எரிவாயு, சிறு கைத்தொழிற் பொருட்களின் மறு ஏற்றுமதி, கருவாடு, பேரீச்சம் பழம்.


சிற்றரசைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • மத்திய கிழக்கு நாடுகளில் பல நாடுகளில் அமைதி இல்லாத சூழல் நிலவிய போதும் துபாய் உட்பட ஏழு ஐக்கிய அரபுக் குடியரசுகளிலும் அமைதியான சூழலும், பெருமளவு வெளிநாட்டு முதலீடுகளும் காணப் படுகின்றது.
  • துபாய் உட்பட மொத்த அமீரகத்தில்(ஐ.அ.குடியரசு) சுமாராக 200,000(இரண்டு லட்சம்) தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.(தகவலுக்கு நன்றி:திரு.மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்கள், டெல்லித் தமிழ்ச் சங்கம், மற்றும் காற்று வெளி இதழ்)
  • உலகின் மிகவும் உயரமான கட்டிடம் என வர்ணிக்கப் படும் 163 மாடிகளைக் கொண்ட 828 மீட்டர் உயரமான Burj Khalifa எனும் கட்டிடம் துபாயில் உள்ளது.

1 கருத்து:

நாடோடிப் பையன் சொன்னது…

Informative post. Thanks.

கருத்துரையிடுக