வெள்ளி, டிசம்பர் 16, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செய்யும்நீர
செய்யாது அமைகலா வாறு. (219)   

பொருள்: பிறர்க்கு உதவி செய்து ஒழுகும் கடமையை இயல்பாக உடையவருக்கு, பிறர்க்கு உதவி செய்ய முடியாமல் வருந்துவதே அவருக்கு வறுமையாகும்.

2 கருத்துகள்:

கோவி சொன்னது…

தினம் ஒரு குறள்.. விளக்கம் கொஞ்சம் கதை மாதிரி எதாவது உதாரணத்தோடு கொடுத்தால் இன்னும் நல்ல இருக்கும் நண்பரே..

anthimaalai@gmail.com சொன்னது…

அன்பார்ந்த நண்பர் கோவி அவர்கட்கு,
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள். நீங்கள் கூறிய கருத்தை எதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கு முயற்சி செய்கிறோம்.
அந்திமாலை இணையமானது ஒரு தனி மனிதனின் ஆர்வ மிகுதியினாலும், "ஆர்வம் உள்ள பலரை ஊக்குவிக்க வேண்டும்" என்ற லட்சியத்துடனும் ஆரம்பிக்கப் பட்டதாகும். இதை இயக்கி வரும் ஆசிரிய பீடம் பரபரப்பான, ஓட்டமும் நடையுமான வாழ்க்கைக்கு உட்பட்ட ஐரோப்பிய நாட்டில் இருந்து இயங்கி வருகிறது. இவ் இணையப் பக்கத்தில் பல வகையான ஆக்கங்களை வழங்குவதற்கு எமக்கு மிகவும் பற்றாக்குறையாக இருப்பது நேரம் என்ற மிகப் பெறுமதியான 'வளம்' மட்டுமே.
உங்கள் ஆதரவிற்கு நன்றி.
"ஒன்றுபட்டு உயர்வோம்"

ஆசிரிய பீடம்
www.anthimaalai.dk

கருத்துரையிடுக