செவ்வாய், டிசம்பர் 13, 2011

நாடுகாண் பயணம் - கிழக்குத் திமோர்

நாட்டின் பெயர்:
கிழக்குத் திமோர் (East Timor)
*இந்நாட்டின் பெயரை 'கிழக்குத் தைமூர்' எனவும் 'கிழக்குத் தீமோர்' எனவும்
உச்சரிப்போரும் உள்ளனர்.

முழுப் பெயர்:
திமோர் லெஸ்தே ஜனநாயகக் குடியரசு(Democratic Republic of Timor Leste)


அமைவிடம்:
தென் கிழக்கு ஆசியா 


எல்லைகள்:
*ஒரு பிரதான தீவின் அரைப்பங்கு என்பதால் தீவின் தென் மேற்குப் பகுதியில் மட்டும் இந்தோனேசியத் திமோரை எல்லையாகக் கொண்டது.
வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய மூன்று பக்கங்களும் இந்து சமுத்திரமும் வடக்கில் நூறு கிலோ மீட்டர் தொலைவில் இந்தோனேசியாவும் தெற்கில் 640 கிலோமீட்டர் தொலைவில் அவுஸ்திரேலியாவும் உள்ளன.


தலைநகரம்:
டிலி (Dili)
*இந்நாட்டின் தலைநகரத்தின் பெயரை 'திலி' என உச்சரிப்போரும் உள்ளனர்.
இருப்பினும் 'டில்லி' என உச்சரித்தல் தவறாகும்.


அலுவலக மொழிகள்:
தெட்டும்(Tetum) மற்றும் போர்த்துக்கேய மொழி.


அங்கீகரிக்கப் பட்ட ஏனைய மொழிகள்:
இந்தோனேசிய மொழி(Bahasa Indonesia) மற்றும் ஆங்கிலம்.
இது தவிரவும் எழுத்துரு இல்லாத 16 பிரதேச மொழிகள் உள்ளன.


இனங்கள்:
அஸ்ட்ரோனேசியர், பப்புவன், மிகச்சிறிய தொகையில் சீனர்கள்.


சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கம் 98%
முஸ்லீம்கள் 1%
புரட்டஸ்தாந்துகள் 1% 


கல்வியறிவு:
59%


ஆயுட்காலம்:
ஆண்கள் 65 வருடங்கள் 
பெண்கள் 70 வருடங்கள் 


ஆட்சி முறை:
பாராளுமன்ற ஜனநாயகத்துடன் கூடிய கூட்டாட்சிக் குடியரசு.


ஜனாதிபதி:
ஜோச ராமோஸ் ஹோர்டா (Jose Ramos-Horta)
*இது 13.12.2011 அன்று உள்ள நிலவரம் ஆகும்.


பிரதமர்:
ஷனனா குஸ்மாவோ (Xanana Gusmao)
*இது 13.12.2011 அன்று உள்ள நிலவரம் ஆகும்.
**இவர் கிழக்குத் திமோரை விடுவிக்கப் போராடிய ஒரு முன்னாள் விடுதலைப் போராளி என்பது குறிப்பிடத் தக்கது.


பரப்பளவு:
14, 874 சதுர கிலோ மீட்டர்கள் 
*இலங்கையின் நிலப் பரப்பில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே பரப்பளவாகக் கொண்ட மிகச் சிறிய நாடு.


சனத்தொகை:
1,066,582(2010 ஆம் ஆண்டு மதிப்பீடு)
*மாலைதீவின் சனத்தொகையைப் போல் மூன்று மடங்கு அதிக சனத்தொகையைக் கொண்ட மிகச் சிறிய நாடு.


நாணயம்:
அமெரிக்க டாலர் (US$)


இணையத் தளக் குறியீடு:
.tl


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 670

விவசாய உற்பத்திகள்:
காப்பி, அரிசி,சோளம், மரவள்ளிக் கிழங்கு, வற்றாளங் கிழங்கு, சோயா அவரை, முட்டைக் கோஸ்(கோவா), மாம்பழம், வாழை, வனிலா.


வருமானம் தரும் தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள்:
அச்சுப் பதிப்பு, சோப்(சவர்க்காரம் தயாரித்தல்), கைவினைப் பொருட்கள் உற்பத்தி, துணிகள் நெசவு செய்தல்.


ஏற்றுமதிப் பொருட்கள்:
காப்பி, சந்தனக் கட்டை,வனிலா, பளிங்குக் கற்கள்(மார்பிள்), எரிபொருள்(பெற்றோலியம்). 


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • பதினெட்டாம் நூற்றாண்டு தொடக்கம் போர்த்துக்கேயக் குடியேற்ற நாடாக இருந்த நாடு.
  • இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் ஜப்பான் இப்பிரதேசத்தைக் கைப்பற்றிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
  • 28.11.1975 ஆம் ஆண்டில் போர்த்துக்கலிடம் இருந்து விடுதலை கிடைத்தது.
  • ஒன்பது நாட்கள் மட்டுமே சுதந்திரக் காற்றைச் சுவாசித்த இந்நாட்டு மக்கள் இந்தோனேசியா இந்நாட்டைக் கைப்பற்றிக் கொண்டதனால் அந்நாட்டிடம் அடிமைகள் ஆயினர். அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி விடுதலை வேண்டி இம்மக்கள் 25 வருடங்களுக்கு மேலாக நடத்திய ஆயுதப் போரில் இரண்டரை லட்சம் திமோர் மக்கள் பலியாயினர்.
  • 30.08.1999 இல் ஐ.நாவின். கண்காணிப்புடன் திமோர் இந்தோனேசியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வேண்டுமா? வேண்டாமா? எனக் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றபோது பெரும்பான்மையான திமோரி மக்கள் திமோர் இந்தோனேசியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என வாக்களித்தனர்.
  • வாக்கெடுப்பு முடிவுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்தோனேசிய இராணுவம் நடத்திய வெறியாட்டத்தில் பல ஆயிரக் கணக்கான திமோரிய மக்கள் கொல்லப் பட்டனர். மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அகதிகள் ஆயினர்.
  • ஐ.நா.மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக ஒரு சில மாதங்களில் வன்முறைகள் முடிவுக்கு வந்தன.
  • இந்தோனேசிய இராணுவத்தால் சூறையாடப்பட்டு எலும்புக் கூடாக உருக்குலைந்து கிடந்த கிழக்குத் தீமோர் தேசம் 20.05.2002 தேதியில் பூமிப் பந்தில் புதிய நாடாக உலக நாடுகளின் ஆசீர்வாதத்துடன் உதயமானது.
  • இருபத்தைந்து வருடங்களாக இந்தோனேசிய இராணுவத்தால் வீதிகள், வடிகால் அமைப்புகள், நீர்ப்பாசனம், மின்சார வழங்கல், தண்ணீர் வழங்கல் யாவும் அழிக்கப்பட்ட நிலையிலேயே இந்நாடு அம்மக்களிடம் சுதந்திர பூமியாக ஒப்படைக்கப் பட்டுள்ளது.
  • இந்நாட்டைத் திரும்பக் கட்டி எழுப்புவதற்கு பல தசாப்தங்கள் எடுக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
  • எரிபொருள்(பெற்றோலியம்) வளமுள்ள நாடாக இருப்பினும் உலகில் வறிய நாடுகளின் வரிசையில் 120 ஆவது இடத்தில் கிழக்குத் திமோர் உள்ளது.
  • இந்நாடு இன்னமும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளதால் இந்நாட்டிற்கென நாணயம் உருவாக்கப் படவில்லை.
  • நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியில் ஐ.நாவும் பல வல்லரசு நாடுகளும் ஈடுபட்டுள்ளன.
  • ஐ.நாவின் அமைதிகாக்கும் பிரிவு, ஐ.நா.காவல்துறை, ஐ.நாவின் 'ஸ்திரத் தன்மையைப் பேணும் அமைப்பு' ஆகியன இந்நாட்டில் செயற்பட்டு வருகின்றன.    

5 கருத்துகள்:

Suthan France சொன்னது…

Excellent, thanks anthimaalai

பெயரில்லா சொன்னது…

மாலைதீவின் சனத்தொகையைப் போல் மூன்று மடங்கு அதிக சனத்தொகையைக் கொண்ட மிகச் சிறிய நாடு.
Nanry. vaalthukal.

Uthayan சொன்னது…

Have a nice time for typing. thanks

Ramesh, East Timor சொன்னது…

hi friend
actually the roman catholic in East Timor
94.6 percent and vary from different stats.
there are several dialects in East Timor,more than
forty tribal dialects
most of the districts they have their own dialects.
they won the independence from Indonesia
may 20th 2002.
I'm living East Timor now,
So i know some facts,

thank you
Ramesh

anthimaalai@gmail.com சொன்னது…

Dear Friend Ramesh,
Thank You very much for your comments.We were corrected some of the mistakes which you were indicated.
We are publishing these kind of facts after we getting informations from various web sites.
Due to some complicated facts from various sources, we are unable to correct the other facts which you were pointed out.
Thanks for your support.

Your sincerely
Webmaster
www.anthimaalai.dk

கருத்துரையிடுக