செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

நாடுகாண் பயணம் - கொலம்பியா

நாட்டின் பெயர்:
கொலம்பியா (Colombia)

வேறு பெயர்கள்:
கொலம்பியக் குடியரசு 

அமைவிடம்:
தென் அமெரிக்கா (வட அமெரிக்காவின் தென் மேற்குப் பகுதி)

எல்லைகள்:
கிழக்கு - வெனிசுவெலா மற்றும் பிரேசில் 
தெற்கு - ஈக்குவடோர் 
வடக்கு - கரீபியன் கடல் 
வடமேற்கு - பனாமா 
மேற்கு - பசுபிக் சமுத்திரம் 

தலைநகரம்:
பொகொட்டா டி.சி.(Bogota D.C.)

அலுவலக மொழி:
ஸ்பானிஷ்(சில மாவட்டங்களில் ஆங்கிலம்)

இனங்கள்:
மெஸ்டிசோ 58 %
வெள்ளையர் 26 %
ஆபிரிக்கக் கொலம்பியர் 15 %
அமர்இந்தியர்கள் 1 % 


சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கம் 90%
ஏனையோர் 10%

கல்வியறிவு:
90 %

ஆயுட்காலம்:
ஆண்கள் 71.2 வருடங்கள் 
பெண்கள் 78 வருடங்கள் 

ஆட்சி முறை:
ஜனாதிபதி தலைமையிலான கூட்டாட்சி


ஜனாதிபதி:
யுவான் மனுவல் சான்டோஸ் (Juan Manuel Santos) *இது 2.08.2011 அன்று உள்ள நிலவரமாகும்.

துணை ஜனாதிபதி:
அஞ்சலினோ கார்சன் (Angelino Garzon) *இது 2.08.2011 அன்று உள்ள நிலவரமாகும்.

ஸ்பெயின் நாட்டிடமிருந்து விடுதலை:
7.08.1819 (இன்னும் ஐந்து நாட்களில் சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளது)


பரப்பளவு:
1,141,748 சதுர கிலோமீட்டர்கள் 

சனத்தொகை:
45,925,397 (2010 மதிப்பீடு)

நாணயம்:
பெசோ(Peso / COP )


இணையத் தளக் குறியீடு:
.Co

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00+57


விவசாய உற்பத்திகள்:
காப்பி, பூக்கள், வாழைப்பழம், அரிசி, புகையிலை, சோளம், கரும்பு, கொக்கோ, எண்ணெய் வித்துக்கள், காட்டு மூலிகைகள், இறால்.

தொழிற்சாலை உற்பத்திகள்:
துணிவகைகள், உணவு பதனிடல், பெற்றோலியம், உடைகள், பாதணிகள், மதுபானம், இரசாயனங்கள், சீமெந்து, தங்கம், நிலக்கரி, பச்சைக் கற்கள் (மரகதம்)

பிரதான ஏற்றுமதிகள்:
பெற்றோலியம், காப்பி, நிலக்கரி, நிக்கல், பச்சைக் கற்கள் (மரகதம்), வாழைப்பழம், பூக்கள்.


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு.
  • உலகில் நிலக்கரி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • பெற்றோலியம் ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்க நாடுகளில் ஐந்தாவது இடத்திலும், உலகில் பெற்றோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் 29 ஆவது இடத்திலும் உள்ளது.
  • சனத்தொகை அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் 29 ஆவது இடத்தில் உள்ளது.
  • பயங்கரவாதத் தாக்குதல் ஆபத்து நிறைந்த நாடுகளின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
  • கடந்த 2009 ஆம் ஆண்டுவரை ஏராளமான ஆயுதக் குழுக்கள், கடத்தல்கள், மர்மக் கொலைகள் போன்றவற்றால் நாடு சின்னாபின்னமாகியது.
  • நாட்டில் 50% வரையான மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
  • ஒரு ஏழைக்கும் ஒரு பணக்காரனுக்கும் கிடைக்கும் வருமானத்தின் வேறுபாட்டின் அளவு நாற்பது மடங்கு அதிகமாகும்.
  • சுற்றுலாப் பயணிகள் எட்டிப் பார்ப்பதற்கே பயந்த நிலை மாறி, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்நாட்டிற்குச் சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்துள்ளனர். கடந்த வருடத்தில் ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கொலம்பியாவிற்கு வருகை தந்தனர்.
  • லத்தீன் அமெரிக்க நாடுகளில் போதைப் பொருட் கடத்தல், மனிதக் கடத்தல், கெரில்லாக் குழுக்களின் அட்டகாசங்கள் போன்றவற்றால் 1986 - 2010 காலப் பகுதியில் 35,000 பேர் வரையானோர் கொல்லப் பட்டனர். இவர்களில் 2800 பேர் கடத்திக் கொலை செய்யப் பட்டனர்.
  • இந்நாட்டில் தற்போதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதைப் பொருட் கடத்தல் கும்பல்கள் உள்ளதாக மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.
  • உலகிலேயே அதிக அளவில் உள் நாட்டில் இடம்பெயர்ந்த மக்களைக் கொண்ட நாடு.
  • உலகில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொலம்பியாவின் இரண்டாவது பெரிய வியாபாரப் பங்காளியாக சீனா திகழ்கிறது.
  • சீனாவின் ஏற்றுமதிகளைத் துரிதப் படுத்தவும், கொலம்பியாவின் இயற்கை வளங்களை விரைவாகத் துறைமுகங்களுக்குக் கொண்டு செல்வதற்குமாக 220 கிலோமீட்டர் நீளமான ரயில் பாதை ஒன்றை சீனா கொலம்பியாவில் அமைக்கவுள்ளது.
  • பிரபல எழுத்தாளர் 'கபிரியேல் மார்க்கூஸ்' (Gabriel Garcia Marquez), பிரபல பொப் பாடகி 'சக்கீரா' (Shakira), பிரபல கார் ஓட்டப் பந்தய வீரர் ஜுவான் போப்லோ (Juan Pablo Montoya), பிரபல நடிகை சோபியா வேர்காரா(Sofia Vergara) போன்றோர் இந்நாட்டைச் சேர்ந்தவர்கள். 

4 கருத்துகள்:

Mathavan Sweden சொன்னது…

Super.

Arul, DK சொன்னது…

Thanks for the info

பெயரில்லா சொன்னது…

mikka nanry.vaalthukal.

vinothiny pathmanathan dk சொன்னது…

nalla thakaval .inaippukku nanri

கருத்துரையிடுக