செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

நாடுகாண் பயணம் - கொங்கோ(பிராஸவில்ல)

வாசகர்களின் கவனத்திற்கு: உலகில் 'கொங்கோ குடியரசு', 'கொங்கோ ஜனநாயகக் குடியரசு' என இரு வேறுபட்ட இறைமையுள்ள நாடுகள் ஆபிரிக்கக் கண்டத்தில்  இருப்பதால் அடுத்த வாரம் நாடுகாண் பயணத்தில் 'கொங்கோ ஜனநாயக் குடியரசு' இடம்பெற இருக்கிறது. திரும்பத் திரும்ப ஒரே நாடு இடம்பெறுகிறது என யாரும் குழப்பமடைய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
-ஆசிரியர்-

நாட்டின் பெயர்:
கொங்கோ குடியரசு (Republic of the Congo)

வேறு பெயர்கள்:
map Congoகொங்கோ பிராஸவில்ல(Congo Brazzaville), அல்லது சிறிய கொங்கோ(Little Congo) அது மாத்திரமன்றி தனியே 'கொங்கோ' என அழைக்கப் படுவதும் 'கொங்கோ குடியரசே' ஆகும்.

எல்லைகள்:
கபூன், கமரூன், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, கொங்கோ ஜனநாயகக் குடியரசு(முன்னாள் 'ஸயர்'), அங்கோலா சுயாட்சிப் பிரிவு(கபிண்டா), மற்றும் கினியாக் குடாக்கடல்.


தலைநகரம்:
பிராஸவில்ல (Brazzaville)

அலுவலக மொழி:
பிரெஞ்சு 

அங்கீகரிக்கப் பட்ட ஏனைய மொழிகள்:
கொங்கோ/கிட்டுபா(Kongo/Kituba), லிங்கலா(Lingala)


சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கர் 50.5%   
புரட்டஸ்தாந்துகள் 40.2 %
முஸ்லீம்கள் 1.3 %
இயற்கை சமயம் 2.2% 
பஹாய் 0.4%
ஏனையோர் 2.2% 
          

கல்வியறிவு:
83%

ஆயுட்காலம்:
ஆண்கள் 53.6 வருடங்கள் 
பெண்கள் 56.2 வருடங்கள்

அரசாங்க முறை:
ஜனாதிபதி ஆட்சிக் குடியரசு 

ஜனாதிபதி:
டெனிஸ் சசூ ங்கூசோ(Denis Sassou Nguesso) *இது 16.08.2011 அன்று உள்ள நிலவரமாகும்.

பிரான்ஸ் நாட்டிடமிருந்து சுதந்திரம்:
15.08.1960 (*நேற்றைய தினம் சுதந்திர தினத்தைக் கொண்டாடியது)

பரப்பளவு:
Brazzaville  Images342,000 சதுர கிலோ மீட்டர்கள்.

சனத்தொகை:
3,686,000 (2009 மதிப்பீடு)

நாணயம்:
மத்திய ஆபிரிக்க பிராங் (Central African franc CFA / XAF)

இணையத் தளக் குறியீடு:
.cg

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00+242


விவசாய உற்பத்திகள்:
மரவள்ளிக் கிழங்கு, சீனி, அரிசி, சோளம், வேர்க்கடலை, காய்கறிகள், காபி, கொக்கோ, காட்டு மூலிகைகள், மரங்கள்.

தொழிற்சாலைகள்:
பெற்றோலியம், சீமெந்து, மரம் பதனிடல், மதுபானம், சீனி, செம்பனை எண்ணெய்(பாமாயில்), சோப், மாவு, சிகரெட்.

ஏற்றுமதிகள்:
பெற்றோலியம், மரப்பலகை, பதனிடப்பட்ட மரங்கள், சீனி, கொக்கோ, காபி, வைரக் கற்கள்.

5 கருத்துகள்:

Sri Sweden சொன்னது…

Super thkaval.

vetha. சொன்னது…

good vaalthukal.

T.Nathan, Denmark சொன்னது…

Super

Unknown சொன்னது…

பயனுள்ள தகவல் தொடருக....

vinothiny pathmanathan dk சொன்னது…

nalla thakaval.nanri

கருத்துரையிடுக