வரிகள் வேதா. இலங்காதிலகம்.ஓகுஸ், டென்மார்க்.
நல் வார்த்தை.
நல்ல மனமுடையோனின் உதட்டால் தவழ்வது
நல்ல வார்த்தைகளாகவே அமையும்.
நல்ல வார்த்தைகளாகவே அமையும்.
கடும் சொற்கள் கல்லாக விழுந்தால்
கனிவான சொற்கள் மலராகிறது.
கனிவான சொற்கள் மலராகிறது.
ஊசி நுழையா இடத்திலும் நற்சொல்
பாசி விலக்கிப் பாலூற்றும்.
பாசி விலக்கிப் பாலூற்றும்.
ஆங்காரமாய்க் கொதிப்பவனை நல்ல வார்த்தை
பூங்கரமாய் அரவணைத்துச் சாந்தமாக்கும்.
பூங்கரமாய் அரவணைத்துச் சாந்தமாக்கும்.
கடுகைத் துளைப்பதுவாய் நற்சொல் மனப்
படுகை ஊடுருவி அசைக்கும்.
படுகை ஊடுருவி அசைக்கும்.
நல்வார்த்தை வளம் கோடை மழைத்துளியாகி
செல்வாக்குடை வாழ்விற்கு ஓடையாகிறது.
செல்வாக்குடை வாழ்விற்கு ஓடையாகிறது.
அடம் பிடிப்போன் வாழ்வில் அன்புத்
தடமான நல்வார்த்தை காயும்.
தடமான நல்வார்த்தை காயும்.
பண்புடை நற்சொல் சூனியம் விலக்கி
நல்லெண்ணத் தானியம் விளைவிக்கும்.
நல்லெண்ணத் தானியம் விளைவிக்கும்.
சீக்கு அற்ற நல்வார்த்தைகள், ஊக்குவிக்கும்,
ஆக்குவிக்கும், தீமை நீக்குவிக்கும்.
ஆக்குவிக்கும், தீமை நீக்குவிக்கும்.
8 கருத்துகள்:
கடுகைத் துளைப்பதுவாய் நற்சொல் மனப்
படுகை ஊடுருவி அசைக்கும்.
அருமையான நல்வார்த்தைகள் .பாராட்டுக்கள்
இரண்டு படத்தையும் கிளிக் பண்ணிப் பாருங்கள், ஆக்கத்திற்குச் சேரக் கூடியது.
மிகவும் நன்றாகவுள்ளது.
Super.
ஒருவரைப் பார்த்து நாம் கடும் சொற்களைப் பாவிப்பதும் (அதாவது ஒருவரின் மனதை கொலை செய்வதும்) ஒரு உயிரைக் கொலை செய்வதற்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை என அறிந்திருக்கிறேன் .ஒருவரின் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை விடுத்து ஒருவரை மகிழ்விக்கும்
வார்த்தைகளை சொல்லிப் பாருங்கள். அவரின் இதயம் உங்களை வாழ்த்தும் .படத்தை கிளிக் பண்ணி பார்த்தேன்.படத்திலிருந்து என் கண்களை அகற்ற முடியவில்லை .
"வார்த்தைப்பிரயோகங்களை எப்படிக்கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அழகாக குறளில் விளக்கியுள்ளமை.எமக்கும் படிப்பனவாக உள்ளது. வாழ்த்துக்கள்....''வேதா''"
"ஒருவருக்கு 7 பிறப்பு என்று சொல்லுவார்கள். நீங்கள்தான் மும்பு திருவள்ளுவராக பிறந்தீர்கள்?" என எண்ணத்தோன்றுகிறது. உங்கள் குறள்கள் யாவுமே அருமை. குறள்கள் மட்டுமல்ல அனைத்து படைப்புக்களும் அருமை.
அந்திமாலை எனது நன்றிகள். இப்படி ஒரு எழுத்தாளரை உலகத்திற்கு அறிமுகம் செய்தத்துக்கு.
மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக