ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
கோபம்.
அறியாமையின் திரள்வு பெரும் கோபம்.
வெறியாகி சுயத்தைத் தின்றிடும்.
தனியன் கோபம் உருண்டு திரண்டு
மனிதனின் குடும்பப் பகையாகிறது.
குடும்பப் பகை உருண்டு திரண்டு
சமூகம், நாட்டுப் பகையாகிறது.
வன்முறை நிறைந்த தீவிரவாதத்திற்குப் பெரும்
கோபமே முதலான படியாகும்.
கோபமொரு சதுரங்கம். காய் நகர்த்தலில்
பகையை நட்பாக்குவோன் வெற்றியாளன்.
அடுத்தவர் மீது ஏவும் கோபம்
தொடுத்தவருக்கே பாதிப்பு உருவாக்கும்.
கோபம் அடுத்தவருக்கு வலி ஏற்படுத்துவதில்
கோபக்காரன் மிக மகிழ்வான்.
மதகௌரவம், கொள்கைகள் நிலையூன்றத் திணிக்கும்
கோபம், வன்முறைக்கு அழைக்கும்.
நாம் கோபப்படும் போது நம்
நல்ல குணாதிசயங்களை மிதிக்கிறோம்.
கோபம் ஒரு செய்தி, அதன்
காரணத்தைக் கண்டிடல் அவசியம்.
7 கருத்துகள்:
Very good
அருமை
nallathu
good for everybody
yes;;; when we are getting angry, that time we are forgoten, to all in our miend.
angry brink to an happy and tenson,
நல்ல பகிர்வு இதனுடன் தொடர்புடைய இடுகை.
முட்டாள் கழுதை.
http://gunathamizh.blogspot.com/2011/08/blog-post_05.html
நேரம் கிடைக்கும் போது வாங்களேன்.
அனைத்து கருத்தளர்களுக்கும் மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் இறை ஆசி கிட்டட்டும்.
கருத்துரையிடுக